ஹரீஷ் கல்யாணின் வருங்கால மனைவி இவர் தான்...ஏக்க பெருமூச்சு விடும் ரசிகைகள்!
சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாணின் வருங்கால மனைவியின் போட்டோவை பார்த்து இளசுகள் ஏக்கப்பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
நடிகை அமலாபாலுடன் விவகாரமான படத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார் ஹரீஷ் கல்யாண். ஆனால், அந்த படம் சர்ச்சையில் சிக்கியதே தவிர நல்ல பெயரை பெற்றுத் தரவில்லை.
இதையடுத்து,பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து இளசுகளில் இதயத்தில் காதல் மன்னாக பதிந்துவிட்டார்.

நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பான அறிமுகத்தை கோலிவுட்டில் பெற்றுத்தந்தது. இதையடுத்து, ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரியும் சும்மா பக்காவாக இருந்தது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடித்த வகையில் படம் இருந்ததால் பாக்ஸ் ஆபிசில் படம் வசூலை வாரிக்குவித்தது.

காதல் மன்னன்
பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு டீன்ஏஜ் பெண்களின் தூக்கத்தை கெடுத்து வந்த நடிகர் ஹரீஷ் கல்யாண். பிரியா பவானி சங்கர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ஓ மணப்பெண்ணே படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கில் பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்காக ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாகி ஒரிஜினல் படத்தையே விமர்சனத்தில் ஓரம்கட்டியது.

என் வருங்கால மனைவி
ஹரீஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார். அதில்,என்னுடைய குழந்தைபருவத்தில் இருந்தே, எந்த நிபந்தனைகள் அற்ற அன்பையும், பாசத்தையும் வாழ் நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தை தொட ங்க இருக்கிறேன் என்று கூறி , தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரின் பெயரையும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார்.

பொறாமையில் ரசிகர்கள்
ஹரீஷ் கல்யாணின் வருங்கால மனைவி போட்டோவை பார்த்த தீவிர ரசிகைகள் கொஞ்சம் அப்செட்டாகி, நர்மதா உதயகுமாரின் போட்டோவை பொறாமையுடன் உற்றுஉற்றுபார்த்து ஏக்க பெருமூச்சுவிட்டு வருகிறார்கள். ஹரீஷ் கல்யாணுக்கும் நர்மதா உதயக்குமாருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

நூறு கோடி வானவில்
ஹரீஷ் கல்யாண் தற்போது இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சித்தி இத்னானி ஹரீஷிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











