கையில் சாயா மடிச்சு கட்டிய லுங்கியுடன்.. தெறி லுக்கில் ஹரிஷ் கல்யாண்!

சென்னை : தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபலமான நடிகராக உள்ளவர் ஹரிஷ் கல்யாண்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இயக்குனர் சசி உடன் இணைந்து நடிக்கும் படத்திற்காக புது விதமான கெட்டப்பில் இருக்கும் ஹரிஷ் இப்பொழுது கையில் சாயா மடித்துக் கட்டிய லுங்கியுடன் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சர்ச்சையை கிளப்பிய

சர்ச்சையை கிளப்பிய

தமிழ் சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில்

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில்

அரிது அரிது,சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு அதைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்பொழுதுள்ள காதலர்களுக்கு பிடிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருந்த பியார் பிரேமா காதல் வெற்றி பெற்றதோடு இந்த படத்தின் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை இவர் பெற்றார்.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

தெலுங்கிலும் சில நேரடி திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பெல்லி சூபுளு என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஓ மணப்பெண்ணே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முறுக்கி விட்ட மீசை

முறுக்கி விட்ட மீசை

ஓ மணப்பெண்ணே படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது சசி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாசமான கெட்டப்புடன் முறுக்கு மீசை நீண்ட முடி என ஆளே டோட்டலாக மாறி இருக்கும் ஹரிஷ் கல்யாண் கையில் சாயா, கருப்பு சட்டை, முறுக்கி விட்ட மீசை, மடித்து விட்ட லுங்கி என செம்ம மாஸாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X