For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரம்யா பாண்டியன் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிக் பாஸ் பிரபலம்.. என்ன சொன்னாரு தெரியுமா?

  |

  சென்னை: பிக் பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் நடித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் அமேசான் பிரைமில் வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

  சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கி உள்ளார்.

  மீண்டும் சந்தோஷ் நாராயணனை மாற்றிய டைரக்டர்...என்ன காரணம் ? மீண்டும் சந்தோஷ் நாராயணனை மாற்றிய டைரக்டர்...என்ன காரணம் ?

  சமூகத்தில் நடக்கும் அரசியல் மோசடிகளை இரு மாடுகளை மையமாக வைத்து துணிச்சலுடன் சொல்லி உள்ள இந்த படத்தை பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான ஹரிஷ் கல்யாண் வெகுவாக பாராட்டி உள்ளார்.

  அரசியல் தில்லாலங்கடி

  அரசியல் தில்லாலங்கடி

  பணக்காரர்களின் நாய்களை கண்டுபிடித்து கொடுக்கும் போலீஸ் அதிகாரிகள் விவசாயிகளின் மாடுகள் காணாமல் போனால் எப்படி துரத்தி அடிப்பார்கள் என்பதை துணிச்சலுடன் காட்டுவதில் தொடங்கி கால்நடை துறை அமைச்சர் விழாவில் நடக்கும் தில்லாலங்கடி வரை பலரும் சொல்லத் தயங்கும் கருத்துக்களை நெத்தியில் அடித்தாற் போல படமாக்கி உள்ளார் அரிசில் மூர்த்தி.

  பல அரசியல்வாதிகள்

  பல அரசியல்வாதிகள்

  வெளிப்படையாக ஏகப்பட்ட அரசியல்வாதிகள் முகம் தெரிவது போலவே நடிகர்களை வைத்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளுக்கு எல்லாம் சர்ச்சை வெடித்தாலும் பரவாயில்லை என எந்தவொரு சமரசமும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படியொரு கதைக்கு ஓகே சொன்ன சூர்யாவுக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

  மாடு இல்லை பிள்ளைங்க

  மாடு இல்லை பிள்ளைங்க

  மாடுகளை பிள்ளைகளாகவும், நண்பர்களாகவும், குல தெய்வங்களாகவும் வழிபடும் விவசாயிகளின் வாழ்க்கையையும் காணாமல் போகும் வெள்ளையன் மற்றும் கருப்பனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில் தனது கிராமமே சீராகும் சூழலும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

  டைட்டிலே தெறிக்குது

  டைட்டிலே தெறிக்குது

  இன்னைக்கு வல்லரசாகப் போகுது நாளைக்கு காலையில் இந்தியா வல்லரசாகி விடும் என ஒரு பக்கம் அரசியல் தலைவர்கள் பேசி வந்தாலும், உண்மையில் பல கிராமங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டியுள்ள இந்த படத்திற்கு ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என டைட்டில் வைத்து யார் ஆட்சி செய்தாலும் ஏழை மக்களின் நிலை மாறாது என்பதை உணர்த்தி உள்ளார்.

  நடிப்பில் மிரட்டல்

  நடிப்பில் மிரட்டல்

  வீராயி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், வேறு இரு மாடுகளை தானமாக தந்து பிரச்சனையை முடிக்கலாம் என வரும் கால்நடை துறை அமைச்சரை பார்த்து கேட்கும் அந்த கேள்வி இருக்கே.. அந்த ஒரு நடிப்புக்கே கைதட்டல்களை அள்ளி உள்ளார். மாடுகளை கொஞ்சுவதில் இருந்து, அவை தொலைந்தவுடன் சந்தோஷத்தை தொலைத்து நிற்கும் பெண்ணாக நடிப்பில் மிரட்டல்.

  பிக் பாஸ் பிரபலம் வாழ்த்து

  பிக் பாஸ் பிரபலம் வாழ்த்து

  பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரான நடிகர் ஹரிஷ் கல்யண், பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான நடிகை ரம்யா பாண்டியன் நடித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தை பார்த்து விட்டு நெகிழ்ந்து போய் பாராட்டி போட்டுள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  நெகிழ வைத்தது

  நெகிழ வைத்தது

  "சமீபத்தில் பார்த்த #RARA திரைப்படம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்." என நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ள நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் ஹரிஷ் கல்யாணுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  இருவரும் இணைந்து

  இருவரும் இணைந்து

  மேக்கப் போடாமல் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள ரம்யா பாண்டியனும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வரும் ஹரிஷ் கல்யாணும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss former contestant and actor Harish Kalyan praises Bigg Boss season 4 contestant Ramya Pandian’s RARA movie via his twitter handle.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X