ஹரிஷ் கல்யாண் சொல்வதை பார்த்தால் சிம்பு நல்லவரா இருப்பாரோ?
Recommended Video

சென்னை: கடுமையாக உழைத்து களைத்ததால் சிம்பு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தூங்கியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு தான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இந்நிலையில் ஹரிஷ் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஸ்டுடியோ
சக்க போடு போடு ராஜாவின் ரீரெக்கார்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்ன வாய்ஸ் கொடுக்க வந்திருக்கிறேன். பார்க்கலாம் என்று கூறி ஸ்டுடியோவின் கதவை ஹரிஷ் திறக்க அங்கு சிம்பு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

களைப்பு
இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து வேலை செய்வதால் நம் அண்ணன் ஒரு சின்ன ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார் என ஹரிஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

காப்பாத்தும்
ஒருத்தரோட உழைப்பு அந்த மனுஷனை எப்பவுமே காப்பாத்தும் என்று எஸ்டிஆர் அடிக்கடி கூறுவார். இது எஸ்டிஆர் ரசிகர்களுக்கு தெரியும். நிறையே பேர் நிறைய விஷயம் சொல்றாங்க பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார் ஹரிஷ்.

டப்பிங்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு சிம்பு தனது வீட்டு பாத்ரூமில் டப்பிங் பேசி அதை செல்போனில் பதிவு செய்து அனுப்பியதாக தகவல் வெளியான நேரத்தில் அவர் கடுமையான உழைப்பாளி என்கிறார் ஹரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











