ஹரிஷ் கல்யாண் ஜோடியான பிக் பாஸ் போட்டியாளர்: 5ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல் அழகி ரைசா ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்க உள்ளார்.
கிருஷ்ணா நடித்துள்ள கிரகணம் படம் மூலம் இயக்குனரானவர் இளன். ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை இரண்டே கால் மணிநேரம் படமாக காட்டுகிறார்கள்.
கிரகணம் படத்தின் ஹீரோயினாக புதுமுகம் நந்தினி ராய் நடித்துள்ளார்.

ரைசா
கிரகணம் படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாணை வைத்து படம் எடுக்கிறார் இளன். இந்த படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் மேக்கப் அழகி ரைசா வில்சன் நடிக்கிறாராம்.

புதுப்படம்
கிரகணம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் புதுப்படத்திற்கு தயாராகிவிட்டார் இளன். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.

அறிவிப்பு
ஹரிஷ், ரைசா ஜோடி சேரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் கெரியர் பிக்கப்பாகி வருகிறது. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவும் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசை
டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.


Click it and Unblock the Notifications