ராசி பிரச்சனையை ஈஸியாவும்.. ஜாதக பிரச்சனையை ஜாலியாவும் பாருங்க.. தனுசு ராசி நேயர்களே டிரைலர் ரிலீஸ்!

Recommended Video

Harish Kalyan meets Rajinikanth | ஹரிஷ் கல்யாண் அசத்தல் ட்வீட்!

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தனுசு ராசி நேயர்களே படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், திகங்கனா, ரெபா மோனிகா, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ராசி மற்றும் ஜாதகங்களின் பிரச்சனையால், இளைஞர்களின் திருமணம் தடைபடுவதை கருவாக வைத்து ஜாலியாக ஒரு படத்தை இயக்கியுள்ளார் சஞ்சய் பாரதி.

மூல நட்சத்திரம்

மூல நட்சத்திரம்

தனுசு ராசிக்காரர்களுக்கு மூல நட்சத்திரம் இருந்தால், அவர்களுடைய மாமனாருக்கு ஆகாது என்ற மூட நம்பிக்கை மக்களிடையே பரவி வருகிறது. அதிலும் ஒரு சிலர் ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என ஆண்களுக்கு சாதகமாகவும், பெண்களுக்கு பாதகமாகவும் ஜோஷியம் சொல்லி பல இளைஞர்களின் திருமண கனவை கலைத்து வருகின்றனர்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைந்து வருகிறது.

எல்லாம் யுவனாலே

எல்லாம் யுவனாலே

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படம் தான் திரைத் துறையில் ஹரிஷ் கல்யாண் வெற்றிகரமாக செகண்ட் இன்னிங்ஸ் தொடங்க காரணமாக அமைந்துள்ளது.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், தற்போது சஞ்சய் பாரதி இயக்கத்தில் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 6ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

கடும் போட்டி

கடும் போட்டி

ஹரிஷ் கல்யாணுக்கு இந்த முறை சோலோ ரிலீஸ் கிடையாது. கதிரின் ஜடா, சுந்தர்.சியின் இருட்டு மற்றும் தினேஷின் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என மொத்தம் 3 படங்கள் தனுசு ராசி நேயர்களே படத்துக்கு போட்டியாக வரும் டிசம்பர் 6ம் தேதி களமிறங்குகிறது.

டிரைலர் எப்படி இருக்கு?

தனுசு ராசி மூல நட்சத்திரம் கொண்ட நாயகனுக்கு கன்னி ராசி பெண்ணை தேடுவதும், பெண் கிடைக்காமல் அலையும் நாயகனுக்கு இரண்டு காதலிகள் கிடைப்பதும், பின்னர், அதில் வரும் சிக்கல்களும், கடைசியில் எந்த பெண்ணுடன் அவர் சேர்கிறார் என்கிற படத்தின் முழு கதையையும் டிரைலரில் அழகாக எடிட் செய்து படக்குழு வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X