ரெடியாயிட்டீங்களா? அமேசான் பிரைம் வீடியோவில் ஹரீஷ் கல்யாணின் தாராள பிரபு! ரிலீஸ் தேதி இதுதான்!

By

சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில், ஹரீஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படம் வெளியாகிறது.

Recommended Video

படத்துல மட்டும் தான் இப்படி | ACTOR HARISH KALYAN INTERVIEW|DHARALA PRABHU|V-CONNECT|FILMIBEAT TAMIL

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக், தாராள பிரபு.

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். தான்யா ஹோப் ஹீரோயின். விவேக், மருத்துவராக நடித்துள்ளார். சச்சு, அனுபமா குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி உள்ள இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு உயிரணுதானம் பெற்று குழந்தை பாக்கியம் தரும் கிளினிக் நடத்துகிறார் விவேக். ஆஃபர்கள் குவிய, ஆரோக்கியமான டோனர் தேவை. மாட்டுகிறார் ஹரிஷ் கல்யாண். சின்ன வேலை, பெரிய வருமானம் என ஹரிஷ் காட்டில் பண மழை.

மருத்துவம் கைவிரிக்கிறது

மருத்துவம் கைவிரிக்கிறது

டாக்டர் விவேக்கின் திருவிளையாடலால் ஹரிஷ், அவர் காதலி தான்யா கல்யாணம் நடக்கிறது. தான்யாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவம் கைவிரிக்க, ஹரிஷ் ஒரு உயிரணு டோனர் என்பது தெரியவருகிறது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாக வரும் சிக்கலை, விவேக் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது படத்தின் கதை.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

இந்தப் படம் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றது. படம் ஹிட்டாகும் என்ற நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்னை முடிந்த பின் மீண்டும் படத்தை திரையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

டிஜிட்டலில்

டிஜிட்டலில்

இந்நிலையில், இப்போது இந்த படத்தை அமேசான் பிரைம் டைமில் வெளியிட முடிவு செய்துள்ளனர். வரும் 9 ஆம் தேதி இந்தப் படம் அமேசானில் வெளியாக இருக்கிறது. இதை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 'தியேட்டர்களில் வெளியாகி சில நாட்களே ஆன இந்தப் படத்தை வரும் 9 ஆம் தேதி முதல் டிஜிட்டலில் கண்டுகளிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X