ஹரீஷ் கல்யாணின் புது போட்டோசூட்… கொஞ்சும் ரசிகைகள்
சென்னை : ஹரீஷ் கல்யாண் புது போட்டோசூட்டை பதிவிட்டுள்ளார். புது போட்டோ எப்போ வரும் என்று காத்து இருந்த இவரது ரசிகைகள், இவரை வாழ்த்தி இதயங்களை வாரி இறைத்தது மட்டுமல்லாமல், லவ்வபுல் பாய், க்யூட் பாய் என்று கொஞ்சியும் உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். ஆனால் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ்சுக்கு முன்பே சிந்து சமவெளி படத்தில் நடித்து இருப்பார். இந்த படத்திற்கு எதிர்மறையான கருத்து இருந்ததால் இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. பிக் பாஸ்க்கு பின்தான் இவருக்கு ரசிகைகள் கூட்டம் ஏராளம்.

தற்போது புரோவோக் லைப் ஸ்டைல் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட புது போட்டோங்களை ட்வட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது போட்டோக்களுக்காக காத்திருக்கும் ரசிகைகள் உடனே வாழ்த்துக்களையும், இதயங்களையும் வாரி இறைக்கின்றனர். லவபுல் பாய், க்வீட் பாய் என்று கொஞ்சியும் உள்ளனர்.

ஹரீஷ் கல்யான் தற்போது வெங்கட் பிரபு மற்றும் ஆர்.வி.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் 'கசட தபற' படத்தில் நடிக்கிறார் இந்த படத்தை பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்குகிறார். அடுத்ததாக ஹரீஷ் 'தாராளப்பிரபு' படத்தில் நடிக்கிறார் அந்த படம் தற்போது ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது.
அடுத்ததாக நான் நடிக்கும் படங்கள் எல்லாமே காதல் கதை கொண்ட படங்கள் தான் அதற்காக என்னை ரொமன்டிங் ஹீரோவா மட்டும் தான் நடிப்பேனு நினைச்சிடுவாங்களே என்ற பயம் இருக்கு. காதல் படத்துல தான் நடிக்கிறேன் என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் நிறைய இருக்கு என்று கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications











