சசி -ஹரீஷ் கல்யாண் காம்போ படத்தின் சூட்டிங் துவங்கியது... மோஷன் போஸ்டர் வெளியீடு

சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள படம் நூறு கோடி வானவில்.

பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சசி இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது. இதுகுறித்து ஹரீஷ் கல்யாண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஹரீஷ் கல்யாண்

நடிகர் ஹரீஷ் கல்யாண்

பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஹரீஷ் கல்யாண், சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கு சிறப்பான ஏற்றத்தை கொடுத்த படம் பியார் பிரேமா காதல். தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து வருகிறார் ஹரீஷ்.

சிறப்பான ஓ மணப்பெண்ணே

சிறப்பான ஓ மணப்பெண்ணே

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ மணப்பெண்ணே படம் ஓடிடியில் ரிலீசான நிலையில், இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். இந்தப் படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

சசி இயக்கத்தில் ஹரீஷ்

சசி இயக்கத்தில் ஹரீஷ்

இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் சசி இயக்கத்தில் மீண்டும் காதல் கதையை கையில் எடுத்துக் கொண்டு களமிறங்கியுள்ளார் ஹரீஷ் கல்யாண். வெந்து தணிந்தது காடு படத்தில் அறிமுகமாகவுள்ள சித்தி இத்நானி இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மோஷன் போஸ்டர் வெளியீடு

மோஷன் போஸ்டர் வெளியீடு

இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், தற்போது படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை அருண் அருணாச்சலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில், சித்து குமார் இசையமைத்து வருகிறார்.

கண்ணாட்டி பாடல்

கண்ணாட்டி பாடல்

இந்த மோஷன் போஸ்டரில் கண்ணாட்டி என்ற பாடல் பின்னணியில் இசைக்கப்பட்டுள்ளது. ஹரீஷ் மற்றும் சித்து இருவரும் அழகாக காணப்படுகின்றனர். இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் சசி, மாடர்னான காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.

Recommended Video

நானும் வெட்டியா சில வருஷம் இருந்துருக்கேன் | Harish Kalyan Exclusive | Filmibeat Tamil
ஹரீஷ் -அதுல்யா காம்பினேஷன்

ஹரீஷ் -அதுல்யா காம்பினேஷன்

ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த அடங்காதே படத்தை இயக்கிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா ரவி ஜோடியாக மற்றொரு படத்திலும் ஹரீஷ் கல்யாண் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X