பெண்களின் கனவு நாயகன்.. ஹரீஷ் கல்யாண்.. குவியும் காதல் கடிதம்!
சென்னை: இளம் நடிகர்களில் பெண்களின் மனதை பெரிதும் கொள்ளையடித்து வரும் காதல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.
சமீபத்தில் இவரது பிறந்த நாள் வந்து சென்றதையொட்டி பலரும் இவரை வாழ்த்து மழையில் நனைய வைத்தது மட்டுமல்லாமல் நடிகை பிரியா பவானி சங்கர் இவருடன் பேசிய வீடியோ கால் சாட்டையும் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வந்தார்.
இதையடுத்து ரசிகைகள் பலரும் இவருக்கு காதல் கடிதங்களை பரிசாக அளித்துள்ளனர் அதை தற்பொழுது ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய ரசிகர்கள்
தமிழ் திரைப்படத்துறையில் வளரும் இளம் நடிகர்களில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் பின் தொடர ஆரம்பித்துள்ளது.

கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகள்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது மட்டுமல்லாமல் பியார் பிரேமா காதல் படத்தை முதன்முதலாக தயாரித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதில் ரைசா வில்சன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இவ்வாறு கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகள் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த உடனேயே முதல் முதலில் இணைந்து நடித்த படம் இது என்பதால் ரசிகர்களிடம் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

ரீலில் தோன்றியது
பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசாவின் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் ரசிக்க வைத்த நிலையில் இந்த ஜோடி ரீலில் தோன்றியது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியது.

பிரம்மாண்டமாக
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியடைந்து, பாடல் வெளியீட்டு விழாவை மிகச்சிறப்பாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்து ஹரிஷ் கல்யாணை சக்ஸஸ்புல் ஹீரோவாக பிரதிபலித்தது. இவ்வாறு தமிழில் வெற்றியடைந்த பியார் பிரேமா காதல் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துடன் இணைந்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகோபித்த வரவேற்பு
இவ்வாறு பல படங்களுக்குப் பிறகு தனது வெற்றிப் பயணத்தை தொடங்கிய ஹரிஷ் கல்யாணுக்கு தற்போது பெண்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்து வருகிறது. இவ்வாறு பெண்களின் கனவு கண்ணனாக இருந்து வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இவரின் ரசிகர் கூட்டம் இன்னும் பல மடங்கானது.

வீடியோ காலில்
ஓரிரு நாட்களுக்கு முன் இவரது பிறந்த நாள் வந்து சென்றதையொட்டி பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் வீடியோ காலில் உரையாடிய உரையாடலை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார்.
Recommended Video

ரசிகைகள் வர்ணித்து
இது ஒருபுறமிருக்க இவரின் பெண் ரசிகைகள் பலர் ஹரிஷ் கல்யாணை வர்ணித்து காதல் கடிதங்களை எழுதி உள்ளனர். அவை அனைத்தையும் படித்துவிட்டு பூரிப்படைந்த ஹரிஷ் கல்யாண் அந்தக் கடிதங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய நன்றிகளை அந்த தீவிர ரசிகைகளுக்கு தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











