ராப் பாடகராக ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தாஷமக்கான்‘.. அர்த்தம் என்னனு தெரியுமா?

சென்னை: ஹரீஷ் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் டீசல் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், ஹரீஷ் கல்யாண் அடுத்த நடித்து இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தாஷமக்கான் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லிஃப்ட் படத்தை இயக்கிய வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், ஹரீஷ் கல்யாண் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். IDAA Productions மற்றும் Think Studios இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா நேற்று நடைபெற்றது.

Harish Kalyan Movie
Photo Credit:

தாஷமக்கான்: இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஹரீஷ் கல்யாண், முதல் முறை நான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அறிமுகப்படுத்துவதற்கு இப்படி ஒரு விழா நடக்கிறது. 'தாஷமக்கான்' படகுழுவிற்கு என் நன்றி. தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார்.

அனைவருக்கும் நன்றி: இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி என்றார்.

நடிக்க தயங்கினார்கள்: இதையடுத்து பேசிய இயக்குநர் வினீத் வரபிரசாத், டைட்டில் புரமோவிற்கு பலரை அழைக்கத் திட்டமிட்டோம் இறுதியாகப் பத்திரிக்கை நண்பர்கள் முன்பு அறிமுகம் செய்யலாம் என முடிவு செய்த போதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் படத்தில் எனக்கு இந்த மேடை கிடைக்கவில்லை, ஏன் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, நமக்கான மேடையை நாமே உருவாக்கலாம் என ஆரம்பித்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள். ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் தான். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X