ஹரிஷ் கல்யாணின் "ஸ்டார்" திரைப்படம் கைவிடப்பட்டதா?

சென்னை : பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஸ்டார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மூன்று பாடல்களை இசை அமைத்துக் கொடுத்திருந்தார்.

ரஜினி மற்றும் கமல் ஹாசனை உரித்து வைத்தது போல பக்காவான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது ஸ்டார் திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது பியார் பிரேமா காதல். இதற்கு முன் பல திரைப்படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தாலும் அந்தளவுக்கு ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிவந்த பிறகு ரைசா உடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் என்பதால் அதிக அளவு எதிர்பார்ப்புடன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

எல்லா சென்டர்களிலும் ஹிட்

எல்லா சென்டர்களிலும் ஹிட்

யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக தயாரித்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் வைரலாகி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இப்போதுள்ள காதலர்களுக்கு பிடிக்கின்ற வகையில் காதல் காட்சிகள் ததும்ப வெளியான இந்தப் படம் எல்லா சென்டர்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

2 ஃபர்ஸ்ட் லுக்

2 ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில் பியார் பிரேமா காதல் கூட்டணி மீண்டும் ஸ்டார் என்ற படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி 2 அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டிருந்தது . ஒரு போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் பார்க்க அச்சு அசல் தளபதி ரஜினியைப் போலவே இருக்க மற்றொரு போஸ்டரில் சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசனை உரித்து வைத்தது போல அட்டகாசமான 2 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

ஸ்டார் கைவிடப்பட்டது

ஸ்டார் கைவிடப்பட்டது

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்காக மூன்று பாடல்கள் இசை அமைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை படப்பிடிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதால் இயக்குனர் இளன் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வேறு ஒரு ஹீரோவின் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். எனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வந்த ஸ்டார் திரைப்படம் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இந்த உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X