அசிங்கமா இருக்கு, நான் வீட்டுக்கு போறேன்: ஹரிஷ் கல்யாண் அழுகை
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாகக் கூறி ஹரிஷ் கல்யாண் கண் கலங்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய சில நாட்கள் கழித்து வந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ரொம்ப சென்சிட்டிவாக உள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு ஹரிஷுக்கு நிறைய ரசிகைகள் கிடைத்துள்ளனர்.
ஆரவை விட ஹரிஷை தான் பெண்களுக்கு பிடித்துள்ளது.

அழுகை
சோபாவில் உட்கார்ந்து அழுத ஹரிஷிடம் சுஜா காரணம் கேட்டபோது, எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. எங்க வீட்டிற்கு போக வேண்டும் என்று தெரிவித்தார்.

வையாபுரி
வையாபுரி கிளம்பிச் சென்றதற்காக அழுதாக சினேகனிடம் கூறினார் ஹரிஷ். நான் டிராமாவுக்காக எல்லாம் யாரிடமும் பேசாமல் இருக்கவில்லை என்று ஹரிஷ் கூறினார்.

கமல் சார்
எனக்கு கமல் சார் இங்கு வந்ததையே ரசிக்க முடியவில்லை. அவர் என் கன்னத்தை பிடித்து கிள்ளியதையே என்னால் ரசிக்க முடியவில்லை. இப்பவாது சிரிக்கலாமே என்று கேட்டாரு. எனக்கு அசிங்கமாக இருக்கு என்றார் ஹரிஷ்.

ரசிக்க முடியல
கமல் சார் வந்ததையே என்னால் ரசிக்க முடியவில்லை என்றால் இங்குள்ள விஷயங்களை நான் எப்படி ரசித்து மனசு ஒத்துப்போய் செய்ய முடியும். என்னால் ஹரிஷா இருக்க முடியவில்லை என்றார்.

கஷ்டம்
சத்தியமா மண்டை எல்லாம் கொதிக்குது. உண்மை இல்லாத இடத்தில் நம்மால் இருக்க முடியாது. நான் சொந்த வாழ்க்கையில் போராட்டங்களை பார்த்தது இல்லை. நான் வளர்ந்தது அப்படி என்று ஹரிஷ் தெரிவித்தார்.

காதல்
நான் ஒரு பெண்ணை காதலித்து பிரேக்கப் ஆனதால் ஒன்றரை வருஷம் கஷ்டப்பட்டேன். அது தான் நான் அதிகப்படியாக சந்தித்த கஷ்டம். நான் மாறிக்கிட்டு இருப்பது எனக்கு தெரிகிறது. அதை தடுக்க நான் வெளியே போக வேண்டும் என்றார் ஹரிஷ்.


Click it and Unblock the Notifications











