நீண்ட முடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் மும்பையில் சுற்றித்திரியும் ஹரிஷ் கல்யாண்!
சென்னை : தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டடித்த பெல்லி சூபுளு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
ஃபேண்டசி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற படத்தில் மல்டி ஸ்டார்கள் நடித்து வர அதில் ஹரிஷ் கல்யாணம் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரபல சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தில் நடிக்க தற்பொழுது மும்பைக்கு பறந்து சென்ற ஹரிஷ் கல்யாணின் புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மகனாக நடித்து
அதிக பெண் ரசிகர்களைக் கொண்டுள்ள இளம் நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமாக உள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற நானியின் ஜெர்ஸி படத்தில் மகனாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளினார்.

ஜோடியாக பிரியா பவானி சங்கர்
விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய பெல்லி சூபுளு தமிழில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் உருவாகி வருகிறது இதில் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவு பெற்று இதர வேலைகள் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சசி
வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் போதும் எந்த ஒரு கிசுகிசுக்களிலும் சிக்காமல் சமூகத்தில் பல நல்ல உதவிகளை செய்யும் பண்பு கொண்ட ஹரிஷ் கல்யாண் பூ, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சசி உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது பற்றி ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

நீண்ட முடியுடன்
இப்பொழுது இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை பறந்து சென்றுள்ள ஹரிஷ் கல்யாண் அங்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அப்போது மும்பை ஏர்போர்ட்டில் ஹரிஷ் கல்யாண் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அதில் நீண்ட முடியுடன் ஹரிஷ் கல்யாண் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











