ரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா?

ஹரிஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

By Staff

Recommended Video

ஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்- வீடியோ

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்திற்கு ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரும், பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவருமான ரைசாவும் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தினை புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார்.

ஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்:

ஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்:

ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷின் ஜோடியாக காளி படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இவர்களுடன் மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பர்ஸ்ட் லுக்:

பர்ஸ்ட் லுக்:

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று பிக் பாஸ் சீசன் 2 கொண்டாட்டத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக ஹரிஷ், ஷில்பா, மகாபா மற்றும் ரஞ்சித் ஆகியோர் பிக் பாஸ் சீசன் 2 கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். கொண்டாட்ட மேடையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பின்னர் சீசன் 2 போட்டியாளர்களுடன் ஹரிஷ் நடனமாடினார்.

காதல் படம்:

காதல் படம்:

பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போதே இதுவும் நிச்சயம் இளைஞர்களைக் கவரும் வகையில் பியார் பிரேமா காதல் போன்று காதல் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. ஒரு பிடிவாதக்கார ஹீரோவின் காதல் தான் இப்படத்தின் கதைக்களம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாக்சர்:

பாக்சர்:

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் பைக்கராகவும், பாக்‌சராகவும் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புசென்னை மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X