சிம்பு இசையில் பிக்பாஸ் ஹரிஷ் பாடிய பாடல் - ட்விட்டரில் வெளியான வீடியோ!

By Vignesh Selvaraj

Recommended Video

சிம்பு இசையில் பிக்பாஸ் ஹரிஷ் பாடிய பாடல்- வீடியோ

சென்னை : பிக்பாஸ் ஷோ மூலம் பலரின் அன்பை விரைவில் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். இயல்பான குணத்தை வெளிப்படுத்தி பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இப்போது சினிமாவில் பிஸியாகிவிட்டனர். ஹரிஷ் ரைசாவுடன், இளன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஹரிஷ் மீண்டும் ஹீரோவாக நடிப்பதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களை குஷியாக்கியது. இந்நிலையில் சிம்பு இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் ஹரிஷ்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே 53-வது நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து கடைசி வரை பங்கேற்று இரண்டாவது ரன்னர்-அப்பாக வெற்றி பெற்றவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதும், வெளியே வந்தபிறகும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

படத்தில் ஹீரோ

படத்தில் ஹீரோ

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ், 'பொறியாளன்', 'வில் அம்பு' உட்பட சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பரவலாக அறியப்பட்ட ஹரிஷ் கல்யாண் இப்போது இயக்குநர் இளன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சிம்பு ரசிகர்

சிம்பு ரசிகர்

ஹரிஷ் கல்யாண் தீவிரமான சிம்பு ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் வீட்டில் கூட சிம்பு போல நடித்து, ஆடிப்பாடியதை மறக்கமுடியாது. சிம்புவின் இசையில் ஒரு பாடலை பாடியிருப்பதாக நேற்று அறிவித்தார் ஹரிஷ்.

சந்தானம் படம்

வி.டி.வி.கணேஷ் தயாரிப்பில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்தப் படத்தின் மூலம் நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் பாடல்களை யுவன், அனிருத் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

தலைவனுக்காக ரசிகன்

தலைவனுக்காக ரசிகன்

இந்நிலையில், சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்காக சிம்பு இசையில் ஹரிஷ் பாடிய டைட்டில் பாடலின் குட்டி வீடியோவை ஹரீஷ் ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X