»   »  ஹரீஷ் ராகவேந்திரா மீது மனைவி மீண்டும் புகார்

ஹரீஷ் ராகவேந்திரா மீது மனைவி மீண்டும் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பின்னணிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா மீது அவரது மனைவி மீண்டும் வரதட்சணை கொடுமை புகார்கொடுத்துள்ளார். இதையடுத்து ஹரீஷ் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பாரதி படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் ஹரீஷ் ராகவேந்திரா. அந்தப் படத்தில் பாடியநிற்பதுவே நடப்பதுவே பாடல் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இது தவிர மின்னலே படத்தில் இவர் பாடிய ஏஅழகிய தீயே என்ற பாடலும் ஹிட்டானது.

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான பாடகராக உள்ளார்.

அருண் பாண்டியனின் விகடன் படத்தில் ஹீரோவாகவும் நடித்த ஹரீஷ், இப்போது கற்பனை என்ற படத்திலும்ஹரீஷ் நடித்து வருகிறார்.

3 வருடங்களுக்கு முன் ஒரு இசை நிகழ்ச்சிக்காக மலேஷியா சென்றிருந்தபோது மலேஷியாவை சேர்ந்த உமாதேவி என்பவருக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2003ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன்இருவருக்கும் திருமணம் நடந்தது.

இருவரும் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர். ஆனால், ஹரீசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புஏற்பட்டதாக உமா தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து உமாதேவிக்கும் ஹரீசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந் நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன் உமாதேவி பிரசவத்திற்காக மலேசியா சென்றார். ஆண் குழந்தைபிறந்தது.

ஆனால், அதன் பின்னர் உமா தேவி சென்னை திரும்பவில்லை. ஹரீஷிடம் இருந்து விவகாரத்து கேட்டார் உமா.மேலும் தனது திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட ரூ. 25 லட்சம், 50 பவுன் நகைகளையும் திருப்பிக் கேட்டார்.அவற்றை போலீசார் ஹரீஷிடம் இருந்து மீட்டு உமாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் ஹரீஷிடம் இருந்து விவாகரத்து கேட்டும் மனு செய்தார் உமா தேவி.

இந் நிலையில் உமா தேவி நேற்று சென்னை திரும்பி வந்தார். போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரணை சந்தித்து ஒருபுகார் மனுவைக் கொடுத்தார். அதில், என் கணவர் ஹரீஷ் என்னிடம் மேலும் ரூ. 20 லட்சம் வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தினார் என்று கூறியுள்ளார் உமா.

இது குறித்து வட பழன மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தக் காவல் நிலையத்தின்உதவி கமிஷ்னர் சேது கூறுகையில்,

ஹரீஷ் மீது வரதட்சணைக் கொடுமை புகாரையும், பிரதீபா என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்புஉள்ளதாகவும் உமா தேவி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஹரீஷ் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுஎன்றனர்.

இது குறித்து ஹரீஷ் கூறுகையில்,

என் மீது உமா ஏற்கனவே ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கில் உண்மை இல்லை என்று நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது. இதையடுத்து வரதட்சணை புகார் கொடுத்தார். இதனால் நான் அவரிடம் வாங்கிய நகையைத்திருப்பித் தந்துவிட்டேன்.

என் குழந்தைக்காக அவருடன் பலமுறை பேசினேன். சென்னைக்கு வந்து தங்குமாறு சொன்னேன். ஆனால்,அவர் மறுத்துவிட்டு என்னை மலேசியாவில் வந்து தங்கச் சொன்னார்.

அங்கு போய் விட்டால் எனக்கு பாட வாய்ப்புக்கள் வராது, வருமானமும் கிடைக்காது என்பதால் நான் அங்குசெல்ல மறுத்துவிட்டேன். விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் செப்டம்பர் 11ம் தேதிக்குள்இருவருக்கும் இடையே சமரசம செய்து வைத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

இந் நிலையில் பழைய புகாரை மீண்டும் கொடுத்து என்னை அசிங்கப்படுத்தப் பார்க்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil