வித்தியாசமான களத்தில் நம் இயற்கை வாழ்வை கண்முன் நிறுத்தும் “ஹர்காரா” டிரெய்லர் !!

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் திரைப்படம் "ஹர்காரா". இன்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் டிரெய்லரை, புதுமையான முறையில், தமிழ்நாட்டின் பல அஞ்சல் அலுவலர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தின் வழியே வெளியுட்டுள்ளனர்.

Harkara Trailer Launched

சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், இப்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் சொல்கிறது.

வில்லுப்பாட்டு கதை மூலம் ஆரம்பிக்கும் டிரெய்லர், காளி வெங்கட் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவர் வழியே முதல் இந்திய தபால் மனிதனின் கதையாக விரிகிறது. மிகப்புதுமையான முறையில் எடிட் செய்யப்பட்டிருக்கும் டிரெய்லரே ஒரு திரைக்கதை வடிவில் இருப்பது, திரை ஆர்வலர்களிடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ஆக்சன் அதிரடி திரில்லர் என எதுவுமில்லாமல் நம்மை, நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குள், இழுத்து செல்லும், மனதை இலகுவாக்கும் படைப்பாக காமெடி,காதல் என அனைத்தும் நிறைந்த அம்சங்களுடன் இப்படைப்பு உருவாகியுள்ளது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள "ஹர்காரா" படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான வெற்றித் திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு, ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள "ஹர்காரா" திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X