தி லெஜண்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா? ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த அட்டகாச அப்டேட்!

சென்னை: தி லெஜண்ட் படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றதாக அறிவிப்பு வந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் இசை குறித்து காப்பி கேட் சர்ச்சைகள் அதிகமாக கிளம்பிய நிலையில், அவரது மார்க்கெட் அப்படியே ஸ்தம்பித்துப் போனது.

பெரிய கேப் விழுந்த நிலையில், தற்போது தி லெஜண்ட் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

தி லெஜண்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தி லெஜண்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லெஜண்ட் சரவணனின் புதிய அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

2.0 ரஜினி போல

2.0 ரஜினி போல

லெஜண்ட் சரவணன் கரண் ஜோஹர் போலவும் 2.0 ரஜினி போலவும் இருக்கிறார் என தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள படத்தில் லெஜண்ட் சரவணனின் லுக் வேற லெவலில் இருப்பதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆடியோ லாஞ்ச்

ஆடியோ லாஞ்ச்

பீஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்சை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தி லெஜண்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச் கூடிய விரைவில் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாரிஸ் கம்பேக் கொடுப்பாரா

ஹாரிஸ் கம்பேக் கொடுப்பாரா

மின்னலே படம் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். சொல்லப் போனால், ஏ.ஆர். ரஹ்மான் பாலிவுட் பக்கம் பிசியாக இருந்த நிலையில், ஹாரிஸ் தான் நம்பர் ஒன் இசையமைப்பாளர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை அப்படியே மாறிவிட்டது. இந்நிலையில், தி லெஜண்ட் படத்தின் மூலம் இசை ரசிகர்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கம்பேக் கொடுப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

லைன் அப்

லைன் அப்

தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் 30வது படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். மேலும், சிவகார்த்திகேயனின் 21வது படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் கோலிவுட்டில் தனது கொடியை நாட்ட பெரிய முயற்சிகளை செய்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X