twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாரிஸ் ஜெயராஜுக்கு கை மாறியது சிவாஜி கணேசன் தியேட்டர்!

    |

    சென்னை: நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரையரங்கை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கியுள்ளார்.

    தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயிலடி போகும் வழியில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது சாந்தி திரையரங்கம். தஞ்சை மக்களின் சினிமா தாகத்தைத் தீர்த்ததில் சாந்திக்கு முக்கிய பங்கு உண்டு.

    Harris Jayaraj bought Sivaji Ganesan theater!

    சிவாஜிகணேசனால் நிர்வகிக்கப்பட்ட இத்திரையரங்கம் பின்னாளில் சிவாஜி குடும்பத்தாரிடமிருந்து பிரபல தயாரிப்பாளர் ஜீவிக்கு கைமாறியது. மௌனராகம், அக்னி நட்சத்திரம், சொக்கத் தங்கம் போன்ற படங்களை தயாரித்தவர் ஜீவி.

    ஜீவிக்கு கைமாறிய பிறகு, சாந்தி திரையரங்கத்தின் பழமையான நினைவுகள் சிதறடிக்கப்பட்டு நவீனம் என்ற பெயரில் மல்டி பிளெக்ஸாக மாற்றப்பட்டது. சாந்தி என்ற தியேட்டர் ஐந்து ஸ்க்ரீன்களோடு ஜீவி ஸ்டுடியோ என உருமாற்றம் கண்டது.

    இப்போது அந்த ஜீவி ஸ்டுடியோவை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மஜ்னு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்போது விக்ரமின் துருவ நட்சத்திரன், கார்த்தி நடிக்கும் தேவ், கேவி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என பிசியாக உள்ளார். இசையமைப்பாளர்கள் பலரும் நடிகர்களாக அவதாரம் எடுத்துவரும் நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் மல்டி பிளெக்ஸ் தொழிலில் காலடி வைத்துள்ளார்.

    English summary
    Music director Harris Jayaraj entering into multiplex business by taking over of Thanjavur GV Studio.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X