ஏ.ஆர். முருகதாஸால் தெருத்தெருவாக அலைந்த ஹாரீஸ் ஜெயராஜ்.. இசையமைப்பாளர் ஆன பின் நடந்த சம்பவம்!

சென்னை: தமிழ் திரையுலகில், இளையராஜா அவருக்குப் பின்னர், ஏ.ஆர். ரகுமான் என இரண்டு இசை ஜாம்பவான்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்த காலகட்டத்தில், ஏற்கனவே, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், சிற்பி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட கவனிக்கப்படும் இசை அமைப்பாளர்களும் அப்போது இருந்தார்கள். இப்படியான நிலையில், 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக காலடி எடுத்து வைத்து, இப்போது நவீன காலகட்டத்தில் தெளிவான இசை என்றால் அது, ஹாரீஸ் ஜெயராஜ் இசைதான் என தரமான இசையைக் கொடுக்கும் இசை அமைப்பாளராக தரம் உயர்ந்து நிற்கின்றார், ஹாரீஸ்.

இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஹாரீஸ் ஹெயராஜ் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர் மிகப்பெரிய இசை அமைப்பாளர் ஆன பின்னர், அவரை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தெருத்தெருவாக அலைய வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

harris jayaraj harris jayaraj birthday ar murugadoss

ஹாரீஸ் ஜெயராஜை அவரது தீவிரமான ரசிகர்கள், ஹாரீஸ் மாம்ஸ் என அழைத்து வருகின்றார்கள். அதற்கான காரணத்தை ரசிகர்களிடம் கேட்டால், தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றோம் எனக் கூறுகின்றார்கள். இது தொடர்பாக ஹாரீஸ் ஜெயராஜ்ஜிடம் கேட்டபோது, அவர் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்பதாக கூறினார்.

வித்தியாசம்: ஹாரீஸ் ஜெயராஜ் மிகவும் வித்தியாசமான இசை அமைப்பாளர். பல இசைக் கலைஞர்கள் டிரம்ஸ், பேஸ் கிட்டார், பியானோ போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு தங்களது முதன்மை இசையை வடிவமைத்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில், இவரது இசை மட்டும் வித்தியாசமாகவும் பலரைக் கவரும் வகையிலும் இருந்தது.

ரசிகர்கள்: இவரது அட்டகாசமான இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவரது இசையில் ஒரு படம் வருகின்றது என்றாலே, ரசிகர்கள் படத்தை இசைக்காகவே தியேட்டரில் பார்க்க முடிவெடுக்கும் அளவுக்கு ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தார்.

தெருத்தெருவாக: இப்படியான நிலையில் இவர் ஏ.ஆர். முருகாஸ் உடன் இணைந்து, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இதில் 7ஆம் அறிவு படத்தில், போதி தர்மர் கதாபாத்திரத்திற்கு இசை அமைக்க, 6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு இசையை உருவாக்க முடிவு செய்துள்ளார். இதனால், 6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளை தேடித் தேடி சீனாவின் முக்கியமான நகரங்களில் அலைந்து திரிந்துள்ளார். ஆனால் அவருக்கு இசைக் கருவிகள் கிடைக்கவில்லை. அதன் பின்னர், பழைய இசைக்கருவிகளை விற்பனை செய்யும் கடை குறித்து தெரிந்து கொண்ட, ஹாரீஸ் ஜெயராஜ், அங்கு நடந்தே சென்று வாங்கியுள்ளார். இதற்காக அவர் 11 கிலோமீட்டர் நடந்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் உருவாக்கிய கதைக்காக தெருத்தெருவாக அலைந்து இசைக்கருவிகளை வாங்கி, அதன் மூலம் இசை அமைத்துக் கொடுத்த ஹாரீஸ் ஜெயராஜை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X