ஜேடி ஜெர்ரியுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்தது மிகப்பெரிய கிப்ட்.. ஹாரிஸ் சுவாரஸ்ய தகவல்!

சென்னை : அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி லெஜண்ட். இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளனர்.

படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

தி லெஜண்ட் படம்

தி லெஜண்ட் படம்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ளது தி லெஜண்ட் படம். நடிக்க வேண்டும் என்ற அதீத ஆர்வம் கொண்டவர் அருள் சரவணன். முன்னதாக அவரது நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அவருடன் அந்த விளம்பர படங்களில் ஹன்சிகா, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

விளம்பரப் படங்கள்

விளம்பரப் படங்கள்

இந்த விளம்பரங்களுக்கு ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வெகுவாக கலாய்த்து வந்தனர். இதனால் அவரது நிறுவனத்திற்கு நெகட்டிவ் விளம்பரங்கள் கிடைத்தன. அவரும் ட்ரெண்டானார். இந்த கலாய்ப்புகளை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய நடிப்பை தற்போது தொடர்ந்துள்ளார்.

தி லெஜண்ட் படம்

தி லெஜண்ட் படம்

அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ளது தி லெஜண்ட் படம். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ள ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளனர். அவர்கள் இயக்கத்தில் முன்னதாக விசில் படம் ரிலீசானது.

ஜேடி ஜெர்ரி இயக்கம்

ஜேடி ஜெர்ரி இயக்கம்

இந்நிலையில் அருள் சரவணனை வைத்து முன்னதாக விளம்பர படங்களை இயக்கியுள்ள ஜேடி ஜெர்ரியையே தனது இயக்குநர்களாக மாற்றியுள்ளார் அருள் சரவணன். இந்தப் படத்தில் பாடல்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

சிறப்பான விவேக் காட்சிகள்

சிறப்பான விவேக் காட்சிகள்

இந்த ட்ரெயிலர் ரஜினியின் சிவாஜி படத்தை நினைவுப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிவாஜி படத்தில் ரஜினியுடன் விவேக் நடித்திருப்பார். வில்லனாக சுமன் நடித்திருப்பார். அதே காம்பினேஷனில் தற்போது இந்தப் படமும் உருவாகியுள்ளது. விவேக்கின் காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன.

 ஹாரிஸ் ஜெயராஜ் இசை

ஹாரிஸ் ஜெயராஜ் இசை

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ட்ரெயிலர் வெளியீட்டில் பேசிய அவர் முன்னதாக ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உல்லாசம் படத்தில் தான் சின்ன பையனாக கீபோர்ட் பிளேயராக பணிபுரிந்ததாக தெரிவித்துள்ளார். அந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

கலாய்ப்பவர்களுக்கு பதிலடி குடுத்த Legend | Legend Audio Launch | Legend Saravanan Speech #Kollywood
மீண்டும் இணைந்த கூட்டணி

மீண்டும் இணைந்த கூட்டணி

தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி லெஜண்ட் படத்தில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் இணைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹாரிசின் இரண்டு பாடல்கள் வெளியாகி ஏராளமான வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X