HarrisJayaraj: அரண்மனை மாதிரி வீடு.. சொந்தமாக தியேட்டர்ஸ்.. பல கோடிகளுக்கு அதிபதியான ஹாரிஸ் ஜெயராஜ்

சென்னை: மின்னலே திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். கடந்த 22 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் சொத்து மதிப்பு
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ், சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள கெளதம் மேனன், ஏராளமான விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். கெளதம் மேனனின் முதல் படமான மின்னலே மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

 Harris Jayaraj Net worth: Harris Jayaraj net worth in 2024 stands at a whopping 150 crores

கோலிவுட் இயக்குநர்களுக்கு ஏஆர் ரஹ்மானின் ஜெராக்ஸ் போல பாடல்களை கொடுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ஏஆர் ரஹ்மான் பாடல்களை முடிக்க தாமதம் ஆவதாக பல இயக்குநர்கள் வேதனை பட்டுக்கொண்டிருக்க, அதற்கு மாற்றாக ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் மெலடி பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவர் இசையமைத்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் இணையும் படத்துக்கும் ஹாரிஸ் தான் இசை என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதனையடுத்து அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களுக்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பிஸினஸிலும் மாஸ் காட்டி வருகிறார்.

ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஹாரிஸ் ஜெயராஜ், ஆண்டுக்கு 20 கோடி வரை வருமானம் ஈட்டுகிறாராம். வளசரவாக்கத்தில் நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான வீடு இவருக்கு உள்ளது. பார்ப்பதற்கே அரண்மனை மாதிரி இருக்கும் இந்த வீட்டில் தான் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் ஸ்டுடியோவும் இருக்கிறது. ஏஆர் ரஹ்மானை போல வீட்டிலேயே ஸ்டுடியோ வைத்துள்ளார். அதன் மதிப்பு மட்டும் 30 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும், விலையுயர்ந்த ஹம்மர் கார் தான் ஹாரிஸ் ஜெயராஜின் ஃபேவரைட்டாம். BMW கார்களும் வைத்துள்ளார் ஹாரிஸ். இதனிடையே சென்னையில் உள்ள பிரபலமான வணிக வாளகத்தில் இருக்கும் மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஹாரிஸ் ஜெயராஜ்ஜுக்கும் சொந்தமாக 3 தியேட்டர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்மூலமும் பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். ஆகமொத்தம் அவரது சொத்து மதிப்பு 150 கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X