இரண்டாம் உலகம்: விலகிய ஹாரிஸ் ஜெயராஜ்… அனிருத் இசையமைக்கிறார்
இரண்டாம் உலகம் திரைப்படத்தின் பின்னணி இசையமைக்கும் பணியில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்குப் பதிலாக கொலைவெறி புகழ் அனிருத் இசையமைக்க உள்ளாராம்.
இரண்டாம் உலகம் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போவதால்தான் அதிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகியதாக கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு துப்பாக்கி திரைப்படத்திற்குப் பின்னர் அவர் இதுவரை வேறு படம் எதற்கும் இசை அமைக்கவில்லை. தற்போது 4 படங்களுக்கு கமிட் ஆகியிருப்பதால் இரண்டாம் உலகம் படத்திற்கு பின்னணி இசை அமைக்கவில்லையாம்.

இரட்டை வேடத்தில்
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவனின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்'. இந்தப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்
செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முறையாக இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

பின்னணி இசை அனிருத்
படம் கடந்த இரண்டு வருடங்களாக நீண்டு கொண்டே போகிறது. பின்னணி இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது இந்த பணியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். அவருக்குப் பதில் ‘கொலைவெறி' அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

ஹாரிஸ் பிஸி
‘இரண்டாம் உலகம்' படத்திற்கு மட்டுமல்லாது ஹாரிஸ் ஜெயராஜ் மேலும் நான்கு பெரிய பட்ஜெட் படங்களுக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். ஆகையால், இந்த படத்தின் இசை கோர்ப்பு பணியிலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு இரண்டாம் உலகம்
முதன்முதலாக செல்வராகவனுடன் இணைந்துள்ள அனிருத் இப்படத்தின் பின்னணி இசையை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். ‘இரண்டாம் உலகம்' வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











