துருவ நட்சத்திரம் BGM-ல் இப்படியொரு ஸ்பெஷலா... விக்ரம் ரசிகர்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த அப்டேட்
சென்னை: விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
பா ரஞ்சித் இயக்கும் இந்தப் படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அவர் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்தப் படம் விரைவில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் ஒரு முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

விடியலுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம்
கோலிவுட்டின் டாப் ஹீரோவான சீயான் விக்ரம், தங்கலான் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். இதில் நடித்து முடித்த பின்னரே அவரது அடுத்தப் படம் குறித்து அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. முன்னதாக கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருந்தார் விக்ரம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டாலும், நீண்ட நாட்களாகவே வெளியாக முடியாமல் கிடப்பில் கிடக்கிறது துருவ நட்சத்திரம். இந்நிலையில், துருவ நட்சத்திரம் தற்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த அப்டேட்
சில தினங்களுக்கு முன்னர் 'ஜான் விரைவில் உங்களை சந்திப்பார்' ( John will meet you soon ) என்ற கேப்ஷனுடன், துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும், அதில் ஃபைனல் ஸ்டேஜ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. தற்போது இதனை உறுதிசெய்யும் விதமாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்ஜும் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

ஸ்பெஷலாக ரெடியாகும் பிஜிஎம்
இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை வேலைகள் தொடங்கியதாக கூறியுள்ளார். மேலும், 9.1.4 டால்பி இசைக் கலவையில் உருவாகி வருவதாகவும், விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன் எனவும் விக்ரம் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட் கொடுத்துள்ளார். கெளதம் - ஹாரிஸ் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்துமே கோலிவுட் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் என்றால் மிகையாகாது. அதேபோல், பின்னணி இசையிலும் இந்தக் கூட்டணி ரசிகர்களை மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் உற்சாகம்
கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் மின்னலே படத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக வலம் வந்தனர். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என ஹிட் மேல் ஹிட் கொடுத்து அசத்தியுள்ளனர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இருந்து ஏஆர் ரஹ்மான் பக்கம் சென்றார் கெளதம் மேனன். இந்நிலையில், மீண்டும் துருவ நட்சத்திரம் படத்தில் இந்த மேகிக் காம்போ இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விரைவில் ரிலீஸ் தேதி
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜான் என்ற ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட் கொடுத்ததில் இருந்து, துருவ நட்சத்திரம் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா - தீபிகா படுகோன் நடிப்பதாக 2013ம் ஆண்டிலேயே அப்டேட் கொடுத்தார் கெளதம் மேனன். இந்நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎஃப் ஸ்பாட்டில் விக்ரம்
சீயான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கேஜிஎஃப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தாண்டு துருவ நட்சத்திரம் படமும் வெளியாக உள்ளது, விக்ரம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











