twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் அதிர்ந்து போன ஹாரிஷ் ஜெயராஜ்!

    |

    சென்னை: நெருங்கிய நண்பரும் இயக்குநருமான கே.வி. ஆனந்தின் திடீர் மறைவு இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சமீபத்தில் தான் நடிகர் விவேக் மரணம் தொடர்பாக ட்வீட் போட்ட இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவு செய்தியால் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.

    கெத்தா போஸ் கொடுத்து சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட நடிகை ரித்விகா ! கெத்தா போஸ் கொடுத்து சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட நடிகை ரித்விகா !

    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு, என்னுடைய நண்பர் கே.வி. ஆனந்த் மறைந்து விட்டார் என ஹாரிஷ் ஜெயராஜ் மிகவும் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    மியூசிக்கல் காம்போ

    மியூசிக்கல் காம்போ

    இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் ஹாரிஷ் ஜெயராஜ் இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் எல்லாமே வெறித்தனமான ஹிட்டாக அமையும் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் என கே.வி. ஆனந்த் இயக்கிய அத்தனை படங்களுக்கும் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கனா கண்டேன் படத்திற்கு மட்டும் வித்யாசாகர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    டங்கா மாரி

    டங்கா மாரி

    தனுஷ், கார்த்தி, அமைரா தஸ்துர் நடிப்பில் வெளியான அனேகன் படத்திற்காக ஹாரிஷ் ஜெயராஜ் போட்ட டங்கா மாரி பாடல் பட்டித் தொட்டிகளை தாண்டி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கே.வி. ஆனந்த் இயக்கிய அத்தனை படங்களுக்கும் இசையமைப்பாளராக ஹாரிஷ் ஜெயராஜ் பணியாற்றி பல பிளாக்பஸ்டர் பாடல்களை கொடுத்துள்ளார்.

    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு

    கடைசியாக காப்பான் படத்திற்கு இருவரும் இணைந்து பணியாற்றிய நிலையில், இயக்குநர் கே.வி. ஆனந்தின் இந்த திடீர் மரணம் இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜை வெகுவாக பாதித்துள்ளது. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு, இந்த அதிர்ச்சியான செய்தியை கேட்டு உடைந்து போயுள்ளேன். எனது நல்ல நண்பரான கே.வி. ஆனந்தை இழந்துவிட்டேன் என ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் சோகம்

    ரசிகர்கள் சோகம்

    12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜீவா மாராடைப்பால் உயிரிழந்தார். அவர் இயக்கிய அத்தனை படங்களுக்கும் இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் தான் இசையமைத்து இருந்தார். அந்த நல்ல காம்போவிற்கு பிறகு கே.வி. ஆனந்த் - ஹாரிஷ் ஜெயராஜ் காம்போ சிறப்பாக இருந்தது, தற்போது அதுவும் இல்லை என்ற நிலை ஆகி விட்டதே என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    English summary
    Music Director Harris Jeyaraj devastated by KV Anand sudden demise, he says, he lost his best friend in his tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X