ஆளவந்தான் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க மறுத்துவிட்டார் ... தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு!
சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர்.
இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஆளவந்தான் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க மறுத்துவிட்டார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

மின்னலே
ஸ்டைலிஷான காதல் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் மின்னலே. மாதவன், ரீமா சென், அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான அழுத்தமான காதல் திரைப்படம் மின்னலே. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக மின்னலே படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பியது.

சூப்பர் ஹிட் படங்களுக்கு
யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ஹாரிஸ் ஜெயராஜ் முதல் படத்திலேயே மிகச் சிறப்பான இசையை கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். துப்பாக்கி,கஜினி,சாமி, கோவில், காக்க காக்க,அந்நியன், வேட்டையாடு விளையாடு, எங்கேயும் காதல், பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, தாம் தூம், இருமுகன் என பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்தவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்

சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு
மிகவும் வித்தியாசமான துள்ளலான இசையை தொடர்ந்து தன்னுடைய படங்களில் கொடுத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் கௌதம் மேனன் கூட்டணியில் மீண்டும் இணைந்த துருவ நட்சத்திரம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல ஜெயம் ரவியின் 30வது படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்க உள்ளார்.

இசையமைக்க மறுத்துவிட்டார்
இவ்வாறு தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் யுவன் சங்கர் ராஜா,ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பலரிடம் உதவியாளராக பணியாற்றிய போது ஹாரிஸ் ஜெயராஜின் உழைப்பை பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இந்தியாவிலேயே மிக பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரான ஆளவந்தான் படத்திற்கு இசையமைக்க சொல்லி கேட்டாராம். ஆளவந்தான் மூலம் ஹாரிஸ் ஜெயராஜை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்ய நினைத்தாராம். அதற்காக ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்டபோது நான் இப்பொழுது மின்னலே என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறேன் ஏற்கனவே இப்படத்திற்கு இசையமைப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டேன் அதனால் இரண்டாவது படத்திற்கு வேண்டுமானால் ஆளவந்தானுக்கு இசையமைக்கிறேன் என கலைபுலி எஸ் தாணு விடம் ஹாரிஸ் ஜெயராஜ் கூறினாராம். இந்த சுவாரஸ்ய தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு படவிழா மேடையில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











