twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த மனசு தான் சார் கடவுள்.. ஹாரிஷ் ஜெயராஜுக்கு திடீரென குவியும் பாராட்டு.. காரணம் என்ன தெரியுமா?

    |

    சென்னை: இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், தனது வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்ணின் பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஷ் ஜெயராஜுக்கு சமீப காலமாக பெரிய படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

    தற்போது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடித்து வரும் பிரம்மாண்ட படத்தில் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

    ஹாரிஷ் ஜெயராஜ் ட்வீட்

    இந்நிலையில், தனது வீட்டில் 7 ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்து வரும் வேலைக்கார பெண்ணின் பிறந்த நாளை ஹாரிஷ் ஜெயராஜ் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹாரிஷ் ஜெயராஜுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த மனசு தான் சார் கடவுள்

    தனது ட்விட்டர் பக்கத்தில் வேலைக்கார பெண்ணுக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை ஹாரிஷ் ஜெயராஜ் பகிர்ந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள், "அந்த மனசு தான் சார் கடவுள்' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    கம்பேக் சார்

    2001 முதல் 2010ம் ஆண்டு வரை எப்படி இசை துறையில் சிறந்த ஆல்பங்களை கொடுத்து அசத்தினீர்களோ அதே போன்று 2020 முதல் மீண்டும் புதிய சிறந்த ஆல்பங்களை கொடுக்க கம்பேக் ஆகுங்க சார் என இந்த ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    உலகமே திரும்பி பார்க்கணும்

    ஜி நல்ல சாங்கா போடுங்க ஜி.. இந்த உலகமே திரும்பி பார்க்கணும் என இந்த ரசிகர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    குட் ரெஸ்பெக்ட்

    பணிப்பெண் தானே என்று சாதாரணமாக கருதாமல், அவர்களையும் மதித்து அவங்க சந்தோஷத்துல சந்தோஷப்படுற உங்களோட நல்ல மனசு கிரேட் சார் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

    ஹேப்பி பர்த்டே லக்‌ஷ்மி மேடம்

    ஹாரிஷ் ஜெயராஜ் போலவே இந்த ரசிகரும், வேலைக்கார பெண் லக்‌ஷ்மிக்கு மரியாதை கொடுத்து ஹேப்பி பர்த்டே லக்‌ஷ்மி மேடம் என பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ரொம்ப வருத்தம் சார்

    ஹாரிஷ் ஜெயராஜ் சார் உங்க ஆல்பம் லாம் முன்ன மாதிரி இல்லையே.. உள்ளம் கேட்குமே, தாம்தூம், சாமி, அருள், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், எங்கேயும் காதல், மின்னலே போன்ற ஆல்பங்கள் போல இப்போ வர ஆல்பம் இல்லையே ரொம்ப வருத்தம் சார்.. சீக்கிரம் ஒரு நல்ல ஆல்பம் தர வெயிட்டிங் சார் என இந்த ரசிகர் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

    English summary
    Harish Jayaraj Celebrated the servant LAKSHMI birthday yesterday with his family and do a post about the celebration. Fans of Harish Jayaraj praises him for the kind heart and respect to the servant.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X