Just In
- 1 hr ago
தளபதி65 படத்தில்நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 1 hr ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 1 hr ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 2 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Sports
ஒரு நிமிடம் கண்களை கசக்கி பார்த்த ரோஹித்.. சென்னை "மண்ணை" வைத்து பூச்சாண்டி காட்டிய இயான்.. பரபரப்பு
- News
தடுப்பூசி தட்டுப்பாடு: 5 மணி நேரத்தில் தி.மு.க. எம்.எல். ஏ. செய்த பேருதவி.. குவியும் பாராட்டு!
- Automobiles
இது எல்லாம் நடந்தா எஞ்ஜின் ஃபெய்லியர் ஆக போகுதுனு அர்த்தம்... இந்த 5 எச்சரிக்கைகளை மட்டும் தவறி விடாதீங்க!!
- Lifestyle
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடக்கடவுளே.. 54 வயசு தான் ஆகுது.. மூளையில் கட்டி.. பிரபல ஹாரிபாட்டர் நடிகர் காலமானார்
லண்டன்: பிரபல ஹாரிபாட்டர் நடிகர் பால் ரிட்டர் காலமானார். அவருக்கு வயது 54.
இங்கிலாந்து நடிகரான இவர், ஏகப்பட்ட அமெரிக்க டிவி தொடர்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர்.
மூளை கட்டி காரணமாக சிகிச்சை பெற்று வந்த பால் ரிட்டர் திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

காலமானார் பால் ரிட்டர்
1966ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள கென்ட் எனும் இடத்தில் பிறந்த இவர், ஏப்ரல் 5ம் தேதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக காலமானர். தியேட்டர் கலைஞரும் நடிகருமான இவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மூளையில் கட்டி
55 வயது ஆகும் பால் ரிட்டர், சில ஆண்டுகளாகவே மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு தனது வீட்டிலேயே இவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்து விட்டது என பால் ரிட்டரின் ஏஜெண்ட் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹாரிபாட்டர் படத்தில்
கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஹாரிபாட்டர் அண்ட் தி ஹாஃப் பிளட் பிரின்ஸ் படத்தில் எல்ட்ரட் வோர்ப்ளே எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் இவர். மேலும், ஏகப்பட்ட படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து கலக்கியவர். ஹெச்பிஓவில் வெளியான செர்னோபில் தொடர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது.

ஜேம்ஸ்பாண்ட் நடிகர்
ஹாரிபாட்டரை தொடர்ந்து குவாண்டம் ஆஃப் சொலாஸ் எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பால் ரிட்டர். இவருக்கு இருக்கும் உடல் நலக் குறைவு குறித்து இதுவரை வெளிப்படையாக சொல்லாமல் இருந்த நிலையில், இவரது திடீர் மறைவு திரைத்துறை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.