ஹாரி பாட்டர் நடிகர் ராபி கோல்ட்ரேன் காலமானார்…சோகத்தில் மூழ்கிய திரைத்துறை!
ஹாரி பாட்டர் திரைப்பட நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று காலமானார் அவருக்கு வயது 72.
90ஸ் கிட்ஸும் 2கே கிட்ஸும் மிகவும் பிடித்தமா புத்தகம் ஹாரி பாட்டர். கடந்த 25 ஆண்டுகளில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் இது.
குழந்தைகளுக்காக எழுதப்பட்ட மந்திர,தந்திரம், மாயாஜலம் இருந்ததால் அனைவரும் இந்த புத்தகத்தை ரசித்து ரசித்து படித்தனர்.

ஹாரி பாட்டர்
ஜே.கே ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் கதை இதுவரை எட்டு பகுதி திரைப்படங்களாக வெளியாகி உள்ளது. இதில், டேனியல் ரேட்க்ளிஃப், ரூபர்ட் க்ரின்ட் மற்றும் எம்மா வாட்சன் என பலர் நடித்துள்ளனர். மேஜிக் பள்ளி, பறக்கும் துடப்பம், வித்தியாசமான மனிதர்கள் என சிறியர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவருக்கும் பிடித்த படமாகும்.

ராபி கோல்ட்ரேன் காலமானார்
இந்நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராபி கோல்ட்ரேன் இன்று காலமானார். இதை, அவரின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர். நடிகர் ராபி கோல்ட்ரேன் ஸ்காட்லாந்தில் உள்ள ஃபால்கிர்க் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சற்று முன் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

பல விருதுகளை வென்றார்
1990 களின் துப்பறியும் தொலைக்காட்சி தொடரான கிராக்கர் மூலம் புகழ் பெற்றார், அந்த தொடரில் நடித்தற்காக அவர் மூன்று முறை பிரிட்டிஷ் அகாடமி தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். ஜேம்ஸ் பாண்ட் படங்களான கோல்டன் ஐ மற்றும் தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப் ஆகியவற்றிலும் ஜேம்ஸ் பாண்டுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், கோல்ட்ரேன், டேனியல் ராட்க்ளிஃப், எம்மா வாட்சன் மற்றும் ரூபர்ட் கிரின்ட் ஆகியோருடன் அனைத்து எட்டு ஹாரி பாட்டர் படங்களிலும் ராட்சத ரூபியஸ் ஹாக்ரிடாக நடித்து பிரபலமானார்.

மிகவும் திறமைசாலி
ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜேகே ரவுலிங், ராபி கோல்ட்ரேன் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ராபியைப் போல யாரையும் ஒரு சிறந்த மனிதரை இதுவரை நான் பார்த்தது இல்லை. அவர் ஒரு நம்பமுடியாத திறமைக்கு சொந்தக்காரர். அவரை அறிந்துகொள்ளவும், அவருடன் பணிபுரியவும், அவருடன் தலைகுனிந்து சிரித்து இருக்கிறேன். நான் அதிர்ஷ்டசாலி.. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது குழந்தைகள் என இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


Click it and Unblock the Notifications











