முத்த வீடியோவில் சிம்புவுடன் இருப்பது அடுத்தடுத்து ஹிட் கொடுத்த கோலிவுட் நடிகையாமே!
சென்னை: இணையதளத்தில் வெளியான முத்த வீடியோவில் சிம்புவுடன் இருப்பது தான் அல்ல என்று நடிகை ஹர்ஷிகா தெரிவித்துள்ளார். வீடியோவில் இருப்பது இளம் தமிழ் நடிகை என்று கூறப்படுகிறது.
சிமா விருது விழா மலேசியாவில் நடைபெற்றது. விழா நிறைவு நாளான கடந்த 13ம் தேதி மலேசிய ஹோட்டலின் காரிடாரில் ஒரு ஆணும், பெண்ணும் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியானது.
வீடியோவில் இருக்கும் ஆண் நடிகர் சிம்பு என்றும், பெண் கன்னட நடிகை ஹர்ஷிகா என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு
முத்த வீடியோ போலியானது என்றும், அதில் இருப்பது தான் இல்லை என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

ஹர்ஷிகா
வீடியோவில் இருக்கும் பெண் தான் அல்ல என்று நடிகை ஹர்ஷிகா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ விவகாரத்தில் தனது பெயர் தவறுதலாக வெளிவந்துள்ளது என்று ஹர்ஷிகா தெரிவித்துள்ளார்.

ஆடை
வீடியோவில் இருக்கும் பெண் அணிந்திருக்கும் உடை அன்றைய தினம் ஹர்ஷிகா அணிந்திருந்த உடை இல்லையாம்.

ஹீரோயின்
வீடியோவில் சிம்புவுடன் இருப்பது ஹர்ஷிகா இல்லை தமிழில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஒரு இளம் நடிகையாக இருக்கக்கூடும் என விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











