காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்!

By

சென்னை: பிரபல நடிகையை பிரிந்தது ஏன் என்று நடிகர் இப்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் ஹர்ஷவர்தன் ரானே. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், சேகர் காமுலா இயக்கத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து இரு மொழிகளில் ,நீ எங்கே என் அன்பே (அனாமிகா) படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.

ஒன்றாக வாழ்ந்தனர்

ஒன்றாக வாழ்ந்தனர்

இவர், பிரபல இந்தி நடிகை கிம் சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் திடீரென பிரிந்தனர். இதற்கானக் காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

மென்மை ஆத்மா

மென்மை ஆத்மா

இதுபற்றி சோசியல் மீடியாவில் குறிப்பிட்டிருந்த ஹர்ஷவர்தன், மென்மையான ஆத்மாவுக்கு நன்றி. உன்னையும் என்னையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். பை என்று கூறியிருந்தார். அவருடைய பி.ஆர் தரப்பில், இருவரும் பிரிந்துவிட்டனர், அவர்கள் ஒன்றாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

புகைப்படங்கள் நீக்கம்

புகைப்படங்கள் நீக்கம்

இதையடுத்து கிம் சர்மாவுடன் ஒன்றாக எடுத்து பதிவு செய்திருந்த புகைப்படங்களை நீக்கினார் ஹர்ஷவர்தன். நடிகை கிம் சர்மா, இந்தியில் தர், ஃபிடா, யாகம், கட்கம், யாகீன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார். சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பலருடன் கிசுகிசு

பலருடன் கிசுகிசு

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ராம்சரண், காஜல் அகர்வால் நடித்த மகதீரா படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கடைசியாக மனோஜ் மன்சு நடித்த யாகம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. 40 வயதான கிம் சர்மா, சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது பலருடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

அவரைப் பிரிந்தார்

அவரைப் பிரிந்தார்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர், பின்னர், அலி புன்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் தொடர்ந்து நீடிக்கவில்லை. கருத்துவேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார் கிம். இது பாலிவுட்டில் அப்போது பரபரப்பானது.

எதுவும் நடக்காது

எதுவும் நடக்காது

இதையடுத்து, நடிகர் ஹர்ஷவர்தன் ரானேவை காதலித்து வந்தார். இந்நிலையில், இப்போது இந்த திடீர் பிரிவு பற்றி நடிகர் ஹர்ஷவர்தன் ரானேவிடம் கேட்டபோது, கிம் சர்மா ஜாலியானவர், நாங்கள் காதலித்தது உண்மைதான், ஆனால் காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற அவர், தனது DNA-வையும் இதற்கு குற்றம் சாட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X