»   »  அனாமிகாவின் கணவரை காணவில்லை! சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!!

அனாமிகாவின் கணவரை காணவில்லை! சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் முக்கிய இடங்களில் அனாமிகாவின் கணவரைக் காணவில்லை என்ற பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. காணாமல் போன கணவரை கர்ப்பிணி பெண் தேடிச்செல்லும் இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.கர்ப்பிணியாக நயன்தாராகஹானி திரைப்படம் இப்போது தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் தயாராகி வருகிறது. நடிகை நயன்தாரா இதில் கதாநாயகியாக கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.பரபரப்பு போஸ்டர்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதால், ஏதேனும் வித்தியாசமான பப்ளிசிட்டி செய்து பரபரப்பு கூட்ட நினைத்தவர்கள், அனாமிகாவின் கணவரை காணவில்லை என்று சென்னை நகரெங்கும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

nayanthara

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

இந்து மக்கள் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.ஆர்யா - நயன்தாரா திருமணம்இதற்கு முன்பு, ஆர்யாவுடன் நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி படத்தின் ரிலீசுக்கு முன்பும் ஆர்யா-நயன்தாராவுக்கு நிஜமாலுமே திருமணம் நடந்தது போன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினர். அதேபோல் இப்போதும் இந்த பரபரப்பை புகைய விட்டுள்ளனர்.

If you happen to wait at a traffic signal in Chennai and see a "missing" poster featuring actor Harshvardhan Rane, don't be shocked because it's just a promo for upcoming Tamil thriller "Anamika", the remake of Vidya Balan-starrer "Kahaani".

English summary
If you happen to wait at a traffic signal in Chennai and see a "missing" poster featuring actor Harshvardhan Rane, don't be shocked because it's just a promo for upcoming Tamil thriller "Anamika", the remake of Vidya Balan-starrer "Kahaani".
Please Wait while comments are loading...