என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்: பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ரோஸ் மெக்கோவன் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் வந்து குவிகின்றன. இத்தனை ஆண்டுகளாக அவருக்கு பயந்து அமைதியாக இருந்த நடிகைகள் தற்போது தான் தங்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி தைரியமாக வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர்.
ஹார்வியின் முகத்திரையை நடிகைகள் கிழித்துள்ளனர்.

வெயின்ஸ்டீன்
ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன் தெரிவித்தார். மேலும் அவர் ஹார்வியை ட்விட்டரில் விளாசித் தள்ளினார்.

சஸ்பெண்ட்
ரோஸ் ஹார்வியை விளாசியதால் அவரின் ட்விட்டர் கணக்கு கடந்த புதன்கிழமை 12 மணிநேரம் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து பல பெண்கள் ட்விட்டரை புறக்கணித்தனர்.
போராட்டம்
ரோஸ் மெக்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் ட்விட்டரை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் #WomenBoycottTwitter என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

நடிகைகள்
ஹார்வி வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராய் மீதும் கை வைக்க முயன்றார். ஹார்வி தங்களை பலாத்காரம் செய்ததாக 2 நடிகைகள் பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











