மிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்?
சென்னை: அருண் விஜய் போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மிஸ்டல் லோக்கல் மிஸ்டர் மொக்கை என்று படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
அருண் விஜய்
மிஸ்டர் லோக்கல் படம் நன்றாக இல்லை என்று விமர்சனம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் அருண் விஜய் ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு ட்வீட் செய்தார். அதை பார்த்தவர்கள் அவர் சிவகார்த்திகேயன் படத்தை தான் கலாய்க்கிறார் என்று முடிவு செய்துவிட்டனர்.
கிண்டல்
அருண் விஜய் மிஸ்டர் லோக்கல் பற்றி தான் இப்படி நக்கலாக ட்வீட் செய்துள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
சிவா ரசிகர்கள்
அருண் விஜய்யின் ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோபம் அடைந்து ரொம்ப ஆட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
பொறாமை
அருண் விஜய்க்கு சிவகார்த்திகேயன் மீது பொறாமையாம்... உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை, சிவகார்த்திகேயன் சினிமா பின்னணி இல்லாமல் வந்து முன்னேறியவர் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











