‘பர்தா.. தபசும்.. ரம்ஜான் வாழ்த்து..’ புதிய போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கஸ்தூரி!
பர்தா அணிந்து கஸ்தூரி வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: நடிகை கஸ்தூரி பர்தா அணிந்தபடி வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தால், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட இவர், தற்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். புதிய படமொன்றில் போலீசாக நடிக்க இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் திரை பிரபலங்களில் கஸ்தூரியும் ஒருவர். மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விடும் அவரது சுபாவத்தால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கஸ்தூரியின் பதிவு:
இந்நிலையில், தான் பர்தா அணிந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் கஸ்தூரி. இதனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டாரா என ரசிகர்கள் சந்தேகமடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் கேள்வியும் எழுப்பினர்.

இஸ்லாமிய பெண்:
ஆனால், தற்போது அவர் புதிய படமொன்றில் இஸ்லாமிய பெண் வேடத்தில் நடிக்கிறாராம். ஹைதராபாத்தில் அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரம்ஜான் நோன்பு ஆரம்பமாகி விட்டதால், அதற்குப் பொருத்தமாக இப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாக கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

புதிய பெயர்:
அப்படியானால் உங்களுடைய இஸ்லாமிய பேர் என்ன என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தபசும் எனப் பதிலளித்துள்ளார். அதோடு, ‘இந்த மாதம் நோன்பு உள்ள அனைவருக்கும் ரமதான் கரீம். ஹைதராபாதி முஸ்லீம் பெண்னாக ஒரு படத்தில் நடிப்பது தெய்வீகமான ஒன்றாக உள்ளது. எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என கற்று கொண்டேன்' எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிரியாணிக்காகவா?
கஸ்தூரியின் இந்தப் பதிவிற்கு பலர் வாழ்த்துகளைக் கூறி, அழகாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். ஆனால், வழக்கம் போல் சிலர் கஸ்தூரிக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். பிரியாணிக்காக இப்படியெல்லாமா செய்வது என சிலர் ஜாலியாகவும் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











