என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே!
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் திலீப் தனது இரண்டாவது மனைவி காய்வா மாதவனை நிச்சயம் நடிக்கவிட மாட்டார் என மல்லுவுட்டில் பேசப்படுகிறது.
மலையாள நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது படத்தில் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் பேசினார்.
அதற்கு திலீப் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்தது.

என் பொண்டாட்டி
மஞ்சுவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பிய பிரியதர்ஷனிடம் தீலிப் கூறியதாவது, என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது. அவர் நடிக்க மாட்டார் என்றார்.

காவ்யா
திலீப்பை திருமணம் செய்த பிறகு காவ்யா மாதவன் புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட வருவது இல்லை.

ரசிகர்கள்
மஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவை மட்டும் விடவா போகிறார் என்று கேரள ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள். காவ்யா இனி நடிக்க மாட்டார் என மல்லுவுட்டில் கூறப்படுகிறது.

நடிப்பு
நிஷால் சந்திராவை திருமணம் செய்யவிருந்தபோது காவ்யா அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார். அதனால் அவர் தற்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.


Click it and Unblock the Notifications











