விக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா?

By Siva

Recommended Video

யோகி பாபு பேட்டி-வீடியோ

சென்னை: நயன்தாரா யோகி பாபுவுக்காவது பதில் சொன்னாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள செம படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட யோகிபாபு கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

யோகி பாபு

யோகி பாபு

செம படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு நடையை கட்டப் பார்த்தார் யோகி பாபு. கன்டன்டே கிடைக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கூற, கன்டன்ட் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வேன் என்று தானே உஷாராக எஸ்கேப் ஆகிறேன் என்றார்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா ஓகே சொன்னாங்களா இல்லையா என்று செய்தியாளர்கள் யோகி பாபுவிடம் கேட்டனர். அதற்கு அவர், என்னப்பா இது அநியாயமாக இருக்கிறது. நான் அந்த படத்தில் நடித்தேன் அவ்வளவு தான் என்று கூறினார்.

காதல்

காதல்

கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு நயன்தாராவிடம் காதலை சொன்ன கல்யாண வயசு வீடியோ ஹிட்டாகியுள்ளது. அதற்கு தான் நயன்தாரா பதில் அளித்தாரா என்று கேட்கப்பட்டது.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

கல்யாண வயசு பாடல் வீடியோவை பார்த்து யோகி பாபு மீது கடுப்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் எனக்கும் கல்யாண வயசு வந்துவிட்டது என்று நயன்தாராவிடம் இன்ஸ்டாகிராமில் ப்ரொபோஸ் செய்தார். அவருக்கு நயன்தாரா பதில் அளித்தது போன்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X