மகத்தை மன்னித்த காதலி பிராச்சி?: அப்போ யாஷிகாவுடனான காதல்...

By Siva

Recommended Video

மகத் காதலியைப் போல யாஷிகாவின் காதலர் காதலை முறிப்பாரா?- வீடியோ

சென்னை: பிராச்சி மிஸ்ரா மகத்தை மன்னித்து காதலை புதுப்பித்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த போது மகத்துக்கு யாஷிகா மீது காதல் வந்தது. காதலை முதலில் மறுத்த மகத் பின்னர் ஒப்புக் கொண்டார். காதலை ஒப்புக் கொண்ட வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத்.

வெளியே மகத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார்.

பிராச்சி

பிராச்சி

மகத் யாஷிகாவை பார்த்து ஐ லவ் யூ சொன்ன வேகத்தில் அவருடனான காதலை முறித்துக் கொள்வதாக பிராச்சி மிஸ்ரா இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார். பிக் பாஸ் வீட்டில் இருப்பது என் காதலன் அல்ல நான் அனுப்பி வைத்தது வேறு ஒரு ஆள் என்று கூறி ஆதங்கப்பட்டார் பிராச்சி மிஸ்ரா. அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறினார்கள்.

மகத்

மகத்

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற அன்று மகத்துடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு தான் காதலை முறித்துக் கொள்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிராச்சி. மகத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நேரத்தில் அந்த வீடியோ மற்றும் போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார் பிராச்சி. மேலும் தான் மகத்துடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காமல் அப்படியே வைத்துள்ளார் பிராச்சி.

மன்னிப்பு

மன்னிப்பு

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத் நேராக பிராச்சியை சந்தித்து பேசி யாஷிகா மீது ஏற்பட்டது காதல் அல்ல ஈர்ப்பு என்று ஏதாவது காரணம் கூறி மன்னிப்பு கேட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிராச்சி மகத் செய்த துரோகத்தை மன்னித்து அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

யாஷிகா

யாஷிகா

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் உருவான காதல்கள் எதுவும் நிலைக்கவில்லை. இந்நிலையில் மகத், யாஷிகாவின் காதலும் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. யாஷிகாவுக்கும் வெளியே ஒரு காதலர் இருக்கிறார். அப்படி இருந்தும் ஒரே வீட்டில் தங்கியபோது மகத் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X