இது தேவையா? ஹாஸ்பிடலில் இருந்து போட்டோ... பிரபல ஹீரோயினை கண்டபடி விளாசிய ரசிகர்கள்!
சென்னை: மருத்துவமனையில் மாஸ்க் அணிந்து காத்திருப்பது போன்று பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
தமிழில், டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உட்பட சில படங்களில் நடித்தவர், இந்தி நடிகை ராதிகா ஆப்தே.
பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அதிகம் அறியப்பட்டார்.

பாலியல் புகார்
இந்தியில், முன்னணி நடிகையாக இருக்கும் இவர், வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிச்சலாக நடித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். எதையும் வெளிப்படையாகப் பேசுபவர், நடிகை ராதிகா ஆப்தே.

திருமணம்
இவர் லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே இப்போது லண்டனில் கணவருடன் இருக்கிறார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இளவரசர் சார்லஸ்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இப்போது அமெரிக்காவை ஆட்டி படைக்கிறது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது. இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
துணையாக
இந்நிலையில், லண்டன் சென்றுள்ள ராதிகா ஆப்தே, மருத்துவமனை ஒன்றில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்ததும் அவர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக வந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அவர் கேப்ஷனில், தோழியின் பரிசோதனைக்காக, அவர் துணையாக மருத்துவமனைக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

எதுக்கு இப்படி போஸ்ட்?
இதற்கு ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். 'இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வரக்கூடாது. பாதுகாப்பாக இருங்க...' என்று சிலர் கூறியுள்ளனர். 'பிரதமர், வெளிய வராதீங்கன்னு சொல்லிட்டே இருக்கார். இவங்க இந்த மாதிரி போஸ்ட் பண்றதுக்காகவே போறாங்க' என்று ஒருவர் விமர்சித்துள்ளார். 'இந்த நேரத்துல எதுக்கு இப்படியொரு போஸ்ட்? என்று சிலர் திட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











