இந்த 'எக்ஸ்ட்ரா'வை மறந்துட்டீங்களே ரஜினி சார்

By Siva

Recommended Video

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி- வீடியோ

சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் கிடைக்காத தகவல் ரஜினியின் பிறந்தநாள் அன்று கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவித்தார். அந்த அரசியல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் நாளை மறுநாள் வருகிறது.

இந்த பிறந்தநாளில் அரசியல் வருகை குறித்து தெளிவான, உறுதியான முடிவை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல்

அரசியல்

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி கூறியதை கேட்டு அவரின் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் அந்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகப் போகும் நிலையில் அவர் இன்னும் அரசியலில் குதிக்காதது வருத்தம் அளிக்கிறது. அவர் எங்கு சென்றாலும் அரசியல் குறித்த அறிவிப்பையே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தனது அரசியல் வருகை பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் அவர் தனது பிறந்தநாள் அன்று அந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட நினைத்து நேற்று விழா மேடையில் தெரிவிக்கவில்லை என்று ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டுள்ளனர்.

எக்ஸ்ட்ரா

எக்ஸ்ட்ரா

எக்ஸ்ட்ரா பேசக் கூடாது, எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது, எக்ஸ்ட்ரா தூங்கக் கூடாது, எக்ஸ்ட்ரா புகழக் கூடாது, எக்ஸ்ட்ரா திட்டக் கூடாது, எக்ஸ்ட்ரா அட்வைஸ் பண்ணக் கூடாது. வயசு ஆக ஆக எக்ஸ்ட்ரா உப்பு சாப்பிடக் கூடாது, எக்ஸ்ட்ரா சர்க்கரை சாப்பிடக் கூடாது, எக்ஸ்ட்ரா நடக்கக் கூடாது, எக்ஸ்ட்ரா யோசிக்கக் கூடாது என்று இத்தனை எக்ஸ்ட்ரா பற்றி பேசிய ரஜினி தனது ரசிகர்களை எக்ஸ்ட்ரா காக்க வைக்கக் கூடாது என்பதை புரிந்துகொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ரஜினி தனது 68வது பிறந்தநாள் அன்று நிச்சயம் நல்ல செய்தி சொல்வார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். ரஜினி எக்ஸ்ட்ராவாக காக்க வைத்தாலும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை மட்டும் ரசிகர்கள் ஒருபோதும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X