ட்விட்டரில் ரஜினிக்கு மவுசு குறைந்துவிட்டதோ?

By Siva

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்தபோது இருந்த மவுசு தற்போது இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 5ம் தேதி ட்விட்டரில் இணைந்தார். அவர் சேர்ந்த சிறிது நேரம் ட்விட்டரே பரபரப்பானது. ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. ரஜினியின் ட்விட்டர் கணக்கை பார்க்கவே பெரும்பாலானவர்கள் வந்தனர்.

ட்விட்டரில் தன்னை பின்தொடர்ந்த முதல் சில நபர்களுக்கு ரஜினி தான் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டிஜிட்டல் போஸ்டர்களை பரிசாக அளித்தார்.

24 மணிநேரம்

24 மணிநேரம்

ரஜினி ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் அவரை 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ரஜினியை ட்விட்டரின் மார்க்கெட்டிங் தலைவர் வரவேற்றார்.

புரமோஷன்

புரமோஷன்

ட்விட்டரில் ரஜினியை பின்தொடரலாம் என்று ட்விட்டர் நிர்வாகமே விளம்பரம் செய்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

4.5 லட்சம்

4.5 லட்சம்

மே 5ம் தேதியில் இருந்து இதுநாள் வரை ரஜினியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 144 ஆகும்.

மவுசு

மவுசு

ரஜினி ட்விட்டரில் சேர்ந்த வேகத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை பார்த்து அந்த எண்ணிக்கை ஒரு வாரத்திற்குள் 10 லட்சத்தை தாண்டும். மேலும் அவரை நரேந்திர மோடியை விட அதிகமானோர் பின்தொடர்வார்கள் என்று மக்கள் எதிர்பார்பாத்தனர்.

புஸ்

புஸ்

ரஜினியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஓரிரு நாட்கள் வேகமாக அதிகரித்தது. அதன் பிறகு அவருக்கு ட்விட்டரில் உள்ள மவுசு அடங்கிவிட்டது.

ட்வீட்கள்

ட்வீட்கள்

ரஜினி இதுவரை 5 ட்வீட்கள் போட்டுள்ளார். ட்விட்டரில் சேர்ந்துவிட்டேன் என்று ஒரு ட்வீட்டும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று 2 ட்வீட்களும், மோடியின் வெற்றி மற்றும் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவித்து தலா 1 ட்வீட்டும் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X