»   »  டான்ஸ் மாஸ்டரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா அர்ஜுன் பட நடிகை?

டான்ஸ் மாஸ்டரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா அர்ஜுன் பட நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கும், அவரின் டான்ஸ் மாஸ்டருக்கும் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக பேச்சாகக் கிடக்கிறது.

பெங்களூரில் வளர்ந்தவர் தமிழ் பெண்ணான ஸ்ருதி ஹரிஹரன். கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். அர்ஜுனின் நிபுணன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது துல்கர் சல்மானின் சோலோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ஸ்ருதி ஹரிஹரன் தனது டான்ஸ் மாஸ்டரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கன்னட திரையுலகில் ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள்.

ஸ்ருதி

ஸ்ருதி

என்ன ஸ்ருதி ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களா என்று அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நான் அந்த வதந்தி குறித்து கேள்விப்பட்டேன். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் நடந்துள்ளது என்றார்.

திருமணம்

திருமணம்

நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்ளுமாறு என் குடும்பத்தாரும் வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கு திருமணம் நிச்சயமானதும் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று ஸ்ருதி தெரிவித்தார்.

டான்ஸ் மாஸ்டர்

டான்ஸ் மாஸ்டர்

நான் என் டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. நான் திரையுலகை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றார் ஸ்ருதி.

English summary
"It seems that Sruthi Hariharan has secretly gotten married." "Apparently, Sruthi Hariharan has married her dance master." These are a few of the rumours that are spreading about Sruthi Hariharan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil