»   »  வெற்றி மமதை தலைக்கேறி ஓவராக ஆடுகிறாரா பிரபல காமெடி நடிகர்?

வெற்றி மமதை தலைக்கேறி ஓவராக ஆடுகிறாரா பிரபல காமெடி நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் கபில் சர்மா பாலிவுட் நடிகை வித்யா பாலனை 6 மணிநேரம் காத்திருக்க வைத்தது இந்தி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாலிவுட் நடிகை வித்யா பாலன் தான் நடித்துள்ள பேகம் ஜான் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் பிசியாக உள்ளார். பேகம் ஜான் படக்குழு கபில் சர்மா நடத்தும் தி கபில் சர்மா ஷோவில் படத்தை விளம்பரம் செய்ய முடிவு செய்தது.

இதையடுத்து நடிகைகள் வித்யா பாலன், கவுஹர் கான், இலா அருண், பல்லவி ஷார்தா ஆகியோர் கபில் சர்மா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனர்.

கபில்

கபில்

வித்யா பாலன் உள்ளிட்டோர் ஸ்பாட்டுக்கு வந்தும் கபில் சர்மாவை காணவில்லை. வித்யா ஆறு மணிநேரம் பொறுமையாக காத்திருந்த பிறகு அங்கிருந்து கிளம்பினார்.

வித்யா

வித்யா

வித்யா காரில் ஏறில் அமர்ந்தவுடன் கபில் போன் செய்து செட்டுக்கு வாங்க என்று அழைத்துள்ளார். படத்தை விளம்பரம் செய்வது தான் முக்கியம் கோபப்படுவது சரியில்லை என்று நினைத்த வித்யா செட்டுக்கு திரும்பினார்.

சிரிப்பு

சிரிப்பு

கபில் சர்மா தன்னை ஆறு மணிநேரம் காத்திருக்க வைத்தபோதிலும் கோபத்தை காட்டாமல் வித்யா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிரித்து பேசினார்.

தலைக்கனம்

தலைக்கனம்

கபில் சர்மா குடிபோதையில் விமானத்தில் தனது சக நடிகரான சுனில் குரோவரை தாக்கினார். தற்போது வித்யாவை காக்க வைத்துள்ளார். கபிலுக்கு வெற்றி மமதை தலைக்கேறி ஆடுவதாக பாலிவுட்காரர்கள் கூறுகிறார்கள்.

English summary
Comedian Kapil Sharma has made Vidya Balan to wait for six hours when she came to attend The Kapil Sharma Show to promote her upcoming movie Begum Jaan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil