சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடி.. தீயாய் பரவும் தகவல்.. பதறியடித்து பதில் சொன்ன ஹன்சிகா!
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை ஹன்சிகா பதிலளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது சரவணா ஸ்டோர்ஸ். மொத்த சரவணா ஸ்டோர்ஸும் ஒரே குடும்பத்தை அடிப்டையாக கொண்டுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸின் ஒரு கிளையாக சரவணா சூப்பர் ஸ்டோர் இயங்கி வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் இந்த கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான அருள், தங்கள் நிறுவனம் தொடர்பான விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் அருள்
அவருடன் விளம்பர படங்களில் தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். இந்நிலையில் அருள் சினிமாவில் நடிக்கவுள்ளதாக பல மாதங்களாக தகவல் பரவி வருகிறது.

பெத்த தொகை
இதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் நடத்திய விழாவிலும் கலந்து கொண்டார் அருள். நடிகர் சங்க கட்டுமானப் பணிக்கென ஒரு பெத்த தொகையையும் வழங்கினார்.

ஹன்சிகா ஜோடி
இந்நிலையில் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என்றும் இந்த படத்தில் அருளுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளார் என்றும் தகவல் பரவியது.
உண்மையில்லை
இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஹன்சிகா தனது டிவிட்டர் பக்கதில் பதிலளித்துள்ளார். அதில் ஊடகத்தில் வெளியான செய்தியை ஷேர் செய்துள்ள ஹன்சிகா, அந்த தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார்.
உண்மையாக இருந்தால்..
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications