பேரறிஞர் அண்ணா மாதிரி.. Hats Off ஆஃப் முதலமைச்சர் விஜய்.. முதல் ஹிட் கொடுத்த விக்ரமன் பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் ஜோசப் விஜய்; கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கியிருக்கிறார். ஓபனிங்கில் செம அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியிருக்கும் விஜய்; கோயில், பள்ளிக்கூடங்கள், பேரு நிலையங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல் பதவியேற்று முடித்ததும் மாற்று கட்சி தலைவர்களை நேரில் சந்தித்தது பெரிய வரவேற்பை அவருக்கு கொடுத்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் நேற்று முன்தினம் பதவியேற்றார். பதவியேற்றதும் பேசியிருந்த அவர், கடந்த அரசு குறித்து குற்றஞ்சாட்டிவிட்டு; வென்றுவிட்டோம் ஒரு ஆட்டம் ஆடுவோம் என்ற எண்ணம் இருந்தால் இப்போதே அதை அழித்து விடுங்கள் என தன் கட்சிக்காரர்களை, அமைச்சர்களை,எம்.எல்.ஏக்களை கடுமையாக எச்சரித்திருந்தார். முதலமைச்சராக முதல் மேடையிலேயே இந்த அடி அடிக்கிறாரே என்று தவெகவினர் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்.

Hats Off CM Vijay Director Vikraman s Video Goes Viral
Photo Credit:

முதலமைச்சரின் பணிகள்: அந்த மேடையில் வைத்தே மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்துக்கு சென்ற அவர் முதன்முறையாக பூரிப்புடன் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து கோப்புகளை பார்வையிட்டு; அவற்றில் சிலவைகளில் கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார். அதுமட்டுமின்றி காவல் துறை மற்றும் உயரதிகாரிகளை அழைத்து சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.

Also Read
உதயநிதியும் அவர் மகனுமே விஜய் ரசிகர்கள்தான்.. இங்கே பாருங்க வீடியோவை.. இன்பநிதி பின்னிருக்காரு
உதயநிதியும் அவர் மகனுமே விஜய் ரசிகர்கள்தான்.. இங்கே பாருங்க வீடியோவை.. இன்பநிதி பின்னிருக்காரு

நாகரீக அரசியல்: இப்படிப்பட்ட சூழலில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு செயலை செய்தார். முதலமைச்சரான பிறகு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது ஸ்டாலின் முன்னெடுத்த நாகரீக அரசியலின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

வைகோ வீட்டில்: ஸ்டாலினிடம் வாழ்த்தையும், ஆலோசனையையும் பெற்ற விஜய்; வைகோ வீட்டு பணி பெண்களிடம் ஆசீர்வாதமும் வாங்கினார். விஜய்யை பார்த்த அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றார்கள். இவர்கள் எல்லாம் விசிலுக்கு வாக்கு செலுத்தியவர்கள் என்று வைகோவின் மகன் துரை வைகோவும் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு வீட்டு பெண்மணியிடமும் விஜய் இணைந்திருப்பதற்கான சாட்சியை நேற்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்தது.

விக்ரமன் வீடியோ: இந்நிலையில் விஜய்க்கு திரைத்துறையில் முதல் ஹிட்டை கொடுத்த இயக்குநர் விக்ரமன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. எனக்கு எல்லா கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செய்த செயல் ஒன்று எனக்கு அவர் மீது மிகப்பெரிய மரியாதையை உருவாக்கியது. அவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த அரசியல் பண்பை 1967ல் அறிஞர் அண்ணா கொண்டு வந்ததாக என் அப்பா சொல்லியிருக்கிறார். அவர் வென்றபோது தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறியிருக்கிறார். அதற்கு பிறகு இந்த 60 ஆண்டு கால அரசியலில் விஜய் அதை மீண்டும் ஆரம்பித்திருப்பது நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. அதேபோல் முதலமைச்சரான பின் அவர் பேசும்போது, 'ஆட்டம் ஆடி பார்க்கலாம் என்று நினைத்தால் அதை இப்போதே அழித்துவிடுங்கள்' என கூறினார் பாருங்கள். Hats Off முதலமைச்சர் விஜய்" என்றிருக்கிறார். விஜய்க்கு திரைத்துறையில் முதல் மெகா ஹிட்டை பூவே உனக்காக படத்தை இயக்கி விக்ரமன் கொடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X