என்னாது, கோஹ்லிக்கும், அனுஷ்காவுக்கும் கல்யாணமாகி 3 நாளாச்சா?
Recommended Video

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அவர்களின் திருமணம் இத்தாலியின் டஸ்கனி நகரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடக்கிறது என்று தகவல் கிடைத்தது.

அனுஷ்கா
கோஹ்லிக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி இன்னும் வாய் திறக்கவே இல்லை. இத்தாலிக்கு கிளம்பிச் சென்றபோது கூட திருமணத்திற்காக தான் என்று கூறவில்லை.
இத்தாலி
கோஹ்லிக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. எந்நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த 9ம் தேதி ட்வீட்டியிருந்தார்.
ட்வீட்
கோஹ்லி, அனுஷ்காவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் டிசம்பர் 15ம் தேதி தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அந்த பத்திரிகையாளர் இன்று மீண்டும் ட்வீட்டியுள்ளார்.

ரகசியம்
காதலிக்கும்போது தான் கோஹ்லியும், அனுஷ்காவும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது திருமணமத்தையும் ரகசியமாக வைத்துள்ளனர். ஏன் இப்படி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











