twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலக சாதனை படைத்த ஒன்றரை நிமிட குறும்படம் - நீங்க பார்த்திருக்கீங்களா..?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சினிமாத் துறைக்குள் நுழைவதற்கான ஐ.டி.கார்டாக இருப்பவை குறும்படங்கள்தான். குறும்படங்கள் தாண்டி இப்போது பைலட் ஃபிலிம் வரைக்கும் புது இயக்குநர்கள் வந்திருந்தாலும், மிகக் குறுகிய பட்ஜெட்டில் ஒரு குறும்படத்தை எடுத்துப் பாராட்டு பெற்றுவிட ஏங்குபவர்கள் அதிகம்.

    முன்னணி நடிகர்களின் படங்களுக்கான மார்க்கெட்டையே யூ-ட்யூபில் வெளியாகும் டீசர், ட்ரெய்லர்கள் பெறும் லைக்ஸையும், வ்யூவ்ஸையும் வைத்துத் தீர்மானிக்கிற காலம் இது. ஒவ்வொரு படத்தின் யூ-ட்யூப் சாதனைகளும் அடுத்து வருகிற படத்தால் முறியடிக்கப்படுவதுதான் வெற்றியாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.

    Have u seen this world record tamil shortfilm?

    சத்தமின்றி ஒரு குறும்படம் ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. 'மிஸ்டர்.காப்ளர்' எனும் குறும்படம் ஃபேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கானோர் பார்த்தும், லைக் செய்தும், ஷேர் செய்தும் இருக்கிறார்கள். மனித நேயத்தைப் போற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்தக் குறும்படத்தை இயக்கி, தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார் சதீஷ் குருவப்பன்.

    வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தக் குறும்படத்தை 12 கோடிப்பேர் பார்த்திருக்கிறார்கள். 33 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். 27 லட்சம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்.

    உலகிலேயே அதிகம் பேர் பார்த்த குறும்படம் இதுதானாம். இதற்காக கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்திருக்கிறார் இதன் இயக்குநர் சதீஷ் குருவப்பன். இவர் இதுவரை 14 குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அனைத்துமே சமூக நோக்கத்தில் எடுக்கப்பட்டவைதான்.

    English summary
    The film's YouTube hits are now determining the market. The Tamil short film has created a world record. 'Mr.Cobbler' shortfilm was watched, liked, and shared by millions of people on Facebook.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X