உங்களுக்கு விருதா, என்ன காசு கொடுத்து வாங்கிட்டீங்களா?: நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்
மும்பை: விருது வாங்கிய நடிகையை என்ன காசு கொடுத்து வாங்கிவிட்டீர்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
நானும் பாலிவுட் நடிகை என்று சொல்லிக் கொள்பவர் ராக்கி சாவந்த். அவரை படங்களில் பார்ப்பதை விட செய்திகளில் பார்ப்பது தான் அதிகம். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருப்பார்.

அவருக்கு சன்னி லியோனை கண்டாலே பிடிக்காது. அதனால் அவரையும் அவ்வப்போது விளாசுவார். இந்நிலையில் சிறந்த ஐட்டம் டான்ஸருக்கான தாதாசாகேப் பால்கே விருது ராக்கி சாவந்துக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.
கடந்த சனிக்கிழமை அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. விருதை வாங்கிய ராக்கி ஐட்டம் கேர்ள்ஸுகளுக்கும் விருது கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ராக்கி இதுவரை 75 முதல் 100 ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அவருக்கு விருது கிடைத்ததை பார்த்த நெட்டிசன்களோ, என்ன ராக்கி காசு கொடுத்து வாங்கிவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீங்க என்ன பெரிய ஐட்டம் டான்ஸர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளே போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகிறார்கள். நியாயப்படி இந்த விருது அவர்களில் யாராவது ஒருவருக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











