குஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா?: பாஜகவுக்காக...
Recommended Video

சென்னை: குஷ்பு சுந்தர் பாஜகவினருக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். பாஜகவினர் குஷ்புவின் இயற்பெயரை கண்டுபிடித்து ட்வீட்டினார்கள்.
அதை பார்த்த அவரோ, எஸ் மை நேம் இஸ் கான் நக்கத் கான். இதையே இப்பத் தான் கண்டுபிடித்தீர்களா என்று கேட்டு பாஜகவினரை அசிங்கப்படுத்தினார்.

நக்கத் கான்
என் பெயர் நக்கத் கான் என்பதை நான் மறைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார் குஷ்பு. இந்நிலையில் அவர் ட்விட்டரில் தனது பெயரை குஷ்பு சுந்தர் பாஜகவுக்கு நக்கத் கான் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு
குஷ்பு தனது பெயரை மாற்றியுள்ளதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் மேடம் என்று அவரை பாராட்டியுள்ளனர்.
ட்வீட்
கனிமொழியின் பிறப்பு குறித்து பேசிய நபரை ட்விட்டரில் விளாசியுள்ளார் குஷ்பு. அந்த நபரின் இனிஷியல் எச்சை என்று சரியாக உள்ளது என ஒரே போடாக போட்டுள்ளார் குஷ்பு.
கட்சி
குஷ்பு கனிமொழிக்கு ஆதரவாக ட்வீட் போட்டதை பார்த்த ஒருவர், நீங்கள் ஏன் உங்கள் தோழியின் கட்சியில் இருந்து வெளியே வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











